தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணொருவரை மறித்த பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் ஜா – எல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
தலைக்கவசம் அணியாது மோட்டார் சைக்கிளில் குறித்த பெண் பயணித்துள்ள நிலையில், அவரை வீதியில் கடமையில் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் மறித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு ஓடி தலை மறைவாகியுள்ளார்.
எவ்வாறாயினும், மோட்டார் சைக்கிளின் இலக்கத்தகட்டை வைத்து பொலிஸார் குறித்த பெண்ணின் இருப்பிடத்தை அடையாளம் கண்டுள்ளதுடன், கந்தானை பகுதியிலுள்ள பெண்ணின் வீட்டிற்கும் பொலிஸார் சென்றுள்ளனர்.
அங்கு பொலிஸார் சென்ற போது, குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த பெண் விசாரணைக்காக பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக ஜா-எல பொலிஸார் தெரிவித்தனர்.
