இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவான செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்த பின், நடிகர் அருண் விஜய்க்கு தொடர்ச்சியான படங்களில் நடிக்க வாய்ப்பு வருகிறது. அந்த வகையில், அவர் நடிப்பில் உருவான தடம் திரைப்படம், வெளியாகி இருக்கிறது. படம் வெளியான சில மணி நேரத்தில், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில், படம் வெளியாகி விட, படக் குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கும் தடம் படம், நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. குற்றம் – திரில்லர் திரைப்படமான இப்படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்துள்ளன.
இந்நிலையில், தடம் திரைப்படம் ரிலீசான சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் சட்டவிரோதமாக வெளியிட்டுள்ளனர். இதை, பலரும் டவுன்லோட் செய்து பார்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. தடம் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தாலும், தமிழ் ராக்கர்ஸின் இந்த செயலால் படக் குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவுக்கு கடும் சவாலாக இருக்கும் பைரசி விவகாரத்தில் தடம் திரைப்படமும் சிக்கியுள்ளது.