அறிமுக நடிகர்கள் மகேந்திரா – சிக்கல் ராஜேஷ் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் ‘இரவின் விழிகள்’ எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் இயக்குநர்கள் ஆர். வி. உதயக்குமார் – பேரரசு – போஸ் வெங்கட் – மு. களஞ்சியம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாக பங்கு பற்றினர்.
அறிமுக இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இரவின் விழிகள்’ எனும் திரைப்படத்தில் மகேந்திரா, சிக்கல் ராஜேஷ், நீமா ரே, ‘நிழல்கள்’ ரவி, அஸ்மிதா, கும்தாஜ் , சேரன் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாஸ்கர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. எம். அசார் இசையமைத்திருக்கிறார். சைக்கோ த்ரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மகேந்திரன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” பெண்கள் இன்றும் அடிமையாகத்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.