Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியுடன் சந்திப்பு

October 18, 2018
in News, Politics, World
0

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான சாத்தியமான வழிமுறையொன்றை அடுத்தவாரம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது விசேட கூட்டமொன்றின் ஊடாக கண்டறியவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் நேற்று உறுதியளித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், எம். ஏ சுமந்திரன், வைத்தியர் எஸ்.சிவமோகன் மற்றும் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரை உள்ளடக்கிய ஆறு பேர் கொண்ட குழு நேற்று ஜனாதிபதியைச் சந்தித்தது.

இச் சந்திப்பின் போது தமிழ் அரசியல் கைதிகள் ஏன் விடுவிக்கப் படவேண்டும் என்பதற்கான பல காரணங்களை எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

அரசியல் கைதிகளின் விடயம் சட்ட ரீதியாக மாத்திரம் பார்க்கப்பட வேண்டிய ஒன்றல்ல. இது தமிழ் தேசிய பிரச்சினையுடன் தொடர்புடைய விடமாதலால் இது அரசியல் ரீதியாக எதிர்நோக்க வேண்டும் என கூட்டமைப்பு இச் சந்திப்பில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியது.

அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் இருக்கிறார்கள். அவர்களை தொடர்ந்து சிறையில் தடுத்து வைத்திருப்பது மனிதாபிமானமற்றது. அவர்களுக்கு எதிராக தாமதம் இல்லாமல் தண்டனை வழங்கியிருந்தால் தற்போது தண்டனைக் காலம் நிறைவேறி வெளியே வந்திருப்பார்கள்.

இவர்கள் அனைவரும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பலருக்கு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட குற்றஒப்புதல் வாக்கு மூலமே அவர்களுக்கெதிரான சாட்சியமாக இருக்கிறது.
அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு புதிய சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கிறது. இப் புதிய சட்டத்தில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் சாட்சியமாக முடியாது. இந்தச் சூழலில் கைதிகள் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதும் இச் சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.

1971ஆம் ஆண்டும் 88,89,ஆம் ஆண்டுகளிலும் மக்கள் விடுதலை முன்னணியை சேர்ந்தவர்கள், அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய பலர் விடுவிக்கப்பட்டார்கள். யுத்தம் முடிவடைந்த பின்பு முன்னைய அரசாங்கத்தின் தீர்மானத்தின் படி அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடிய 12,000 போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். ஆகையால், இந்தக் கைதிகளை தொடர்ந்தும் சிறையிலடைத்து வைத்திருப்பது நியாயமற்றது. அவர்களும் விடுவிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

சிறைக் கைதிகள் சிறையில் உண்ணாவிரதமிருந்து போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்கள் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்கவே அந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தியமையும், பொது அமைப்புக்களும்,மக்களும்,பல்கலைக்கழக மாணவர்களும் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நடத்தி வரும் போராட்டங்களும் தமிழ் மக்களது உணர்வுகளையே பிரதிபலிக்கின்றன.

கைதிகள் தமிழர்களாக இருப்பதாலேயே அரசு போதிய அக்கறை செலுத்தாமல் இருக்கிறது என்பதே தமிழ் மக்களின் கருத்தாகவுள்ளது. இது நல்லிணக்கத்துக்கு பாதகமானது என்பதையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இச் சந்திப்பில் வலியுறுத்தியது. இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, அடுத்த வாரம் பிரதமர், சட்ட மாஅதிபர், மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரையும் அழைத்து இந்த விடயத்தை சாதகமாக அணுகி கைதிகளின் விடுதலையை எவ்விதமான முறையில் நிறைவேற்றலாம் என்பதை முடிவு செய்வதாக மேற்படி கூட்டத்தில் உறுதியளித்துள்ளாரென கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

Previous Post

102 தமிழ் அரசியல் கைதிகளில் சிலரை விடுதலை செய்வது தொடர்பில் அரசு ஆராய்வு

Next Post

மல்லாகத்தில் ஹெராயின் போதை பொருளுடன் இளைஞர் கைது

Next Post

மல்லாகத்தில் ஹெராயின் போதை பொருளுடன் இளைஞர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

எல்ல – வெல்லவாய பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் இழப்பீடு

அநுர அரசின் 2027 பட்ஜெட் சமர்ப்பிப்பு திகதி அறிவிப்பு

July 13, 2026
புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்

இசை குயில் ‘எஸ். ஜானகிக்கு இந்தியத் தலைவர்கள் இரங்கல்

July 13, 2026
இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

இரா. சம்பந்தனுக்கு கிழக்கில் பொது இடத்தில் சிலை அமைக்க அனுமதியோம் | எழுந்த எதிர்ப்பு

July 12, 2026
ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

ஆனந்த சுதாகரனின் உயிருக்கு ஆபத்து – முருகையா கோமகன் தெரிவிப்பு

July 12, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures