Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது: ரணில்

May 21, 2023
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
சம்பந்தனின் நிலைப்பாட்டை வரவேற்கும் ரணில் அரசாங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது. ஏனைய போர்கள் தொடர்வதாகத் தோன்றுகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை கொழும்பு நகரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்களைச் சுற்றி பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரினால் ஏற்படுத்தப்பட்டிருந்த கடுமையான பாதுகாப்பு வளையம் பற்றிய முறைசாரா கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த விடயத்தினை தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்போது பாதுகாப்பு தரப்பில் உள்ள உயர்மட்ட அதிகாரிகளிடையே ஏற்பட்டுள்ள முறுகல்களை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது: ரணில் | Sri Lankan War Ranil And Government

போராட்டம்

இதேவேளை பல்கலைக்கழக மாணவர்களால் கொள்வனவு செய்யப்பட்ட 1000 உணவுப் பொதிகள் பற்றிய தகவல்கள், கடந்த ஆண்டு ஏற்பட்டதைப் போன்ற ஒரு பெரிய போராட்டத்தின் அச்சத்தைத் தூண்டியதாகவே பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்திருந்தன.

இதனடிப்படையில் வன்முறையை சமாளிக்க படையினரும் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போர் மட்டுமே முடிந்தது: ரணில் | Sri Lankan War Ranil And Government

பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு 

எனினும் மீண்டு ஒரு போராட்டத்திற்கான சூழ்நிலை இல்லை என்பதால் சுமார் 72 மணி நேரத்திற்குள் பாதுகாப்பு பலப்படுத்தல் படிப்படியாக திரும்பப் பெறப்பட்டது. பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஸ்தாபனத்தில் இருப்பவர்கள் உணவு கொள்வனவு அடிப்படையில் மதிப்பீடுகளை மேற்கொள்வது அசாதாரணமானது அல்ல.

பிரிவினைவாதப் போரின் போதும் வடக்கில் உள்ள வெதுப்பகங்களை உளவுத்துறை அதிகாரிகள் கண்காணித்த வரலாறுகள் உள்ளன. அசாதாரண அளவு ரொட்டிகள் தயாரிக்கப்படும் போது அவர்களின் கவனம் தூண்டப்படும்.

இதனால், தாக்குதல் நடக்கலாம் என்ற சந்தேகம் படையினர் மத்தியில் இயல்பாகவே ஏற்பட்டு வந்ததாக பாதுகாப்பு தரப்புக்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவேந்தியோரைச் சிறையில் போட வேண்டும்! கொந்தளித்த அரசியல்வாதிகள்

Next Post

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் குறித்து பதற்றப்படும் சிறிலங்கா

Next Post
ரணிலால் இலங்கையில் சிவில் யுத்தம் ஏற்படும் ஆபத்து! பதுங்கு குழியில் மகிந்த | கடுமையான எச்சரிக்கை

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கம் குறித்து பதற்றப்படும் சிறிலங்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures