பஹத் பாசில், சாய்பல்லவி நடிப்பில் மலையாளத்தில் தயாராகி வருகிறது அதிரன். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ரஞ்சித் பணிக்கர், அதுல் குல்கர்னி, சாந்தி கிருஷ்ணா நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், விவேக் இயக்குகிறார்.
படத்தில் நடித்திருப்பவர்கள் பெரும்பாலும் தமிழுக்கு நன்கு அறிமுகமானவர்கள். ஜிப்ரான் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களும் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர்கள். இது ஒரு பிசிக்காலஜிக்கல் திரில்லர் படம். ஊட்டி தான் கதைகளம். இதனால் படத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள். அதோடு தெலுங்கிலும் வெளியிடுகிறார்கள். அடுத்த மாதம் வெளிவருகிறது.

