Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சாய் பல்லவியுடன் திருமணமா? விஜய் விளக்கம்

March 28, 2019
in Cinema
0

மதராசபட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய். இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் ஒருவருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர்.

விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய படங்களை ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. கங்கனா ரணாவத் நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படத்தையும் இயக்க தயாராகி உள்ளார். இந்த நிலையில் விஜய்க்கும், நடிகை சாய் பல்லவிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக இணையதளங்களில் தகவல் பரவி உள்ளது.
சாய் பல்லவி மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்து பிரபலமானவர். விஜய் இயக்கிய தியா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தனுஷ் ஜோடியாக மாரி-2 படத்தில் நடித்திருந்தார். சூர்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ள ‘என்.ஜி.கே.’ படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
விஜய்க்கும், சாய் பல்லவிக்கும் ‘தியா’ படப்பிடிப்பில் காதல் மலர்ந்ததாகவும், விரைவில் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர் என்றும் தகவல் பரவி உள்ளது. இதுகுறித்து விஜய்யிடம் கேட்டபோது மறுத்தார். அவர் கூறும்போது, “என்னையும், சாய் பல்லவியையும் இணைத்து வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. திருமணம் குறித்து நான் சிந்திக்கவில்லை. பட வேலைகளில் முழுமையாக ஈடுபட்டுள்ளேன்” என்றார்.
Previous Post

மோசமான அரசியல் பழிவாங்லுக்கு உள்ளாகியுள்ளேன் – சரத் பொன்சேகா

Next Post

தமிழில் வெளிவருகிறது மலையாள அதிரன்

Next Post

தமிழில் வெளிவருகிறது மலையாள அதிரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures