Thursday, September 18, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும்

July 25, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஆண் குழந்தைக்கு ஆசை | பிறந்து 7 நாட்கள் பெண் குழந்தையை சுட்டுக்கொன்ற தந்தை

முல்லைத்தீவு(mullaitivu) மாவட்டத்தின் மாங்குளம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள அரச வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் கிணற்றிலிருந்து தாயும் இரண்டு குழந்தைகளும் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராமத்தில் இரண்டு பிள்ளைகளோடு வசித்து வந்த நிலையில் குறித்த தாய் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் அவர் வசித்து வந்த வீட்டில் இருந்து சுமார் 500 மீற்றருக்கு அப்பால் உள்ள அரச வீட்டு திட்டத்தில் உள்ள வீட்டுத்திட்ட பயனாளி ஒருவரின் வீட்டு கிணற்றிலிருந்து சடலமாக இன்று(24) மீட்கப்பட்டுள்ளனர்

 சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்

கிணற்றின் அருகில் காணப்பட்ட பொருட்கள்

இன்று காலை குறித்த கிணற்றின் அருகில் கைப்பை ஒன்றும் இதர பொருட்கள் சிலவும் காணப்பட்டதை அடுத்து ஊரில் உள்ள மக்கள் அந்த விடயம் தொடர்பில் கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதன் அடிப்படையில் அங்கு வருகை தந்த கிராம அலுவலர் மற்றும் காவல்துறையினர் கிணற்றில் உடலங்கள் இருப்பதை அடையாளம் கண்டனர்.

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும் | Mother And Two Children Dead In Well In Mullaitivu

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டதன் பின்னர் உடலங்கள் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது

கிணற்றுக்குள் கிடந்த சடலங்கள்

மீட்கப்பட்ட உடலங்களை மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும் | Mother And Two Children Dead In Well In Mullaitivu

 உடலங்களாக மீட்கப்பட்டவர்கள் உசாகரன் மாலினி( வயது38) தாய் மற்றும் உசாகரன் மிக்சா ( வயது11) மகள் உசாகரன் சதுசா (வயது 04) ஆகியவர்களாவர்

உயிரிழப்புக்கான காரணம் என்ன..!

இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பில் மாங்குளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழர் பகுதியில் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்க்கப்பட்ட தாயும் குழந்தைகளும் | Mother And Two Children Dead In Well In Mullaitivu

 தாயும் இரண்டு பிள்ளைகளும் கிணற்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டமை அப்பகுதியில் பெரும் துணயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous Post

துருவேறும் கைவிலங்கு! தமிழ் அரசியல் கைதிகள் சொல்லிச் சென்ற சாட்சியம்

Next Post

தமிழீழ விடுதலைக்காக என் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்! பிரியாவிடை உரையில் வைகோ

Next Post
இந்தியாவை உளவு பார்க்க வரும் சீனக் கப்பலைத் தடுத்து நிறுத்துக | வைகோ

தமிழீழ விடுதலைக்காக என் குரல் தொடர்ந்தும் ஒலிக்கும்! பிரியாவிடை உரையில் வைகோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures