வடக்கு, கிழக்கை மீளக்கட்டியெழுப்ப நீங்கள் என்ன சலுகைகளை வழங்கினீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ஆவேசமாக வினவியுள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், தமிழ்த் தேசம் மீது கடந்த நான்கு, ஐந்து தசாப்தங்களாக தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் ஆக்கிரமிப்பு யுத்தங்களை நீங்கள் முன்னெடுத்திருக்கின்றீர்கள்.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்ற உதவிகள், உலக நாடுகளிடம் இருந்து பெற்ற நிதி உதவிகள், உள்நாட்டு உற்பத்திகள் மூலமாக கிடைத்த வருமானங்களின் ஒரு பகுதி தமிழர் தேசத்திற்கு எதிரான இன அழிப்பிற்கும், ஆக்கிரமிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது.