தனது தாய்மொழியான ஹிந்தி சினிமாவில் சில படங்களில் நடித்த தமன்னாவுக்கு அந்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. ஆனபோதும் ஹிந்தியில் மெகா நடிகர்களுடன் நடித்து மார்க்கெட்டை பிடித்து விடவேண்டும் என்று அவ்வப்போது கூறி வருகிறார்.
அந்தவகையில், சமீபத்தில் என்னை மிகவும் கவர்ந்த நடிகர் ஹிருத்திக் ரோஷன் என்று ஒரு பேட்டியில் கூறிய தமன்னா, அவருடன் முத்தக்காட்சிகளில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமன்னா அளித்த பேட்டி ஒன்றில் எந்த பாலிவுட் நடிகர் உடன் உங்களுக்கு டேட்டிங் செல்ல ஆசை என கேட்கப்பட்டது. இதற்கு சட்டென்று நடிகர் விக்கி கவுசல் என கூறினார்.
விக்கி கவுசல், சமீபத்தில் வெளியான உறி படத்தில் ஹீரோவாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

