எம்ஜிஆர் மூலமாக சினிமாத்துறைக்குள் வந்தவர் இயக்குநர் மகேந்திரன். திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய அவர், முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், ஜானி என 12 படங்களை இயக்கினார்.
விஜய்யின் தெறி, ரஜினியின் பேட்ட மற்றும் நிமிர், மிஸ்டர் சந்திரமெளலி, சீதக்காதி, பூமராங் என பல படங்களில் நடித்துள்ளார். மகேந்திரனுக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நேற்று அவர் சென்னையிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து டைரக்டர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரன் டுவிட்டரில், அப்பாவுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்று பதிவிட்டுள்ளார். அதோடு, டைரக்டர் மகேந்திரனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

