பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பபட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கான தடை நீக்கப்ட்டுள்ளது. அத்துடன் வட்ஸ் அப் சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவற்கும் அவருக்கு சிட்னி நீதிமன்றமொன்றினால் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
31 வயதான தனுஷ்க குணதிலக்க, இருபது20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக இலங்கை அணியுடன அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது, அவுஸ்திரேலிய யுவதி ஒருவரின் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டையடுத்து நவம்பர் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 17 ஆம் திகதி தனுஷ்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறத் தடை, இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாடத் தடை, சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை ஆகியனவும் இவற்றில் அடங்கும்.
இந்நிலையில், இந்நிலையில், பிணை நிபந்தனைகளை மீளாய்வு செய்யக்கோரி தனுஷ்க குணதிலக்க மனுதாக்கல் செய்தார்.
இதையடுத்து, இரவில் வெளியில் நடமாடுவதற்கான தடையை நீதிவான் ஜெனிபர் அட்கின்ஸன் நீக்கியதுடன், வட்ஸ் அப் பயன்படுத்துவத்றகும் அனுமதி வழங்கினார். எனினும், டேட்டிங் தொடர்பான விடயங்களுக்கு இதை பயன்படு;தத முடியாது என நீதிவான் கூறினார்.
இரவில் வெளியில் நடமாடுவதற்கு அரச தரப்பு சட்டத்தரணி N[hu;[; upf;]d; ஆட்சேபம் தெரிவித்தார். எனினும், நீதிவான் ஆட்சேபத்தை நிராகரித்து தனுஷ்க இரவில் நடமாட ஜெனிபர் அட்கின்ஸன் அனுமதி வழங்கினார்.