கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மலையாளத்தில் ஓணம் பண்டிகை ரிலீசாக மோகன்லால் நடித்த ‛இட்டிமானி மேட் இன் சைனா’ என்கிற படமும், நிவின்பாலி நடித்த லவ் ஆக்சன் டிராமா என்கிற படமும் வெளியாகின. இதில் இட்டிமானி படத்தில் இரண்டு வேடங்களில் மோகன்லால் நடித்திருந்தார்.. இதில் ஒரு கதாபாத்திரம் ஐந்து நிமிடங்கள் மட்டுமே வருகிறது.. பிற்பாதியில் மோகன்லாலின் மறைவிற்கு பிறகு அவரது வயதான போட்டோ ஒன்று வீட்டில் மாட்டப்பட்டிருப்பதாக காட்டப்படுகிறது.
இதேபோல லவ் ஆக்ஷன் ட்ராமா படத்தில் நிவின்பாலியின் தாயாக வயதான மல்லிகா சுகுமாரன் நடித்திருந்தாலும், தந்தையாக வயதான நிவின்பாலி போட்டோவே புகைப்படத்தில் மாட்டப்பட்டு இருப்பதாக ஒரு காட்சி இடம் பெற்றுள்ளது.. இரண்டு படங்களிலும் ஒரே மாதிரியான காட்சிகள் இடம் பெற்றிருப்பது ஆச்சரியமான ஒன்றாக பேசப்பட்டு வருகிறது.