கன்னட திரையுலகின் பிரபல நடிகரான டார்லிங் கிருஷ்ணா அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் ‘ஃபாதர்’ எனும் திரைப்படம் – தந்தையின் தியாகத்தை முன்னிலைப்படுத்தி இருப்பதாக படக் குழுவினர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இயக்குநர் இராஜா மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஃபாதர் ‘ எனும் திரைப்படத்தில் டார்லிங் கிருஷ்ணா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சுகுணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு நகுல் அப்யங்கர் இசையமைத்திருக்கிறார். தந்தை – மகன் இடையேயான உறவை உணர்வு பூர்வமாக பேசும் இந்த திரைப்படத்தை ஆர் சி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். சந்துரு மற்றும் யமுனா சந்திரசேகர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” ஒரு தந்தைக்கும், மகனுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான உறவை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை எழுதப்பட்டுள்ளது” என்றார்
தமிழ்- தெலுங்கு -மலையாளம் -கன்னடம் -இந்தி – ஆகிய மொழிகளில் விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு மற்றும் படத்தின் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

