தங்கத்தை திருடிய கனேடியர்

தங்கத்தை திருடிய கனேடியர்

கனேடியர் ஒருவர் அரசு நாணய தொழிற்சாலையில் இருந்து மர்மமான முறையில் 180000 டொலர் மதிப்பிலான தங்கத்தை திருடிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனேடியரான Leston Lawrence அங்குள்ள ராயல் கனடியன் மிண்டில் ஊழியராக இருந்து வருகிறார். இவர் தற்போது தங்கம் கடத்திய குற்றத்திற்காக விசாரணையை சந்தித்து வருகிறார்.

ராயல் கனடியன் மிண்ட் எனப்படும் அரசின் நாணயம் தயாரிக்கும் தொழிற்சாலையில் தங்கத்தின் தரத்தை சோதிக்கும் அலுவலராக லாரன்ஸ் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர் தங்கம் வாங்கும் குறிப்பிட்ட சிலரை அணுகி 7.4 அவுன்ஸ் அளவிலான தங்க கட்டிகளை விற்பனைக்கு அளித்துள்ளார்.

அவர்களிடம் இருந்து காசோலையாக பெற்று அதை வங்கியில் சேமித்து வந்துள்ளார். மட்டுமின்றி தாம் சேமிக்கும் பணத்தை வெளிநாட்டில் உள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளார்.

இவரது இந்த அதிகபடியான வருவாய் மற்றும் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது குறித்த நடவடிக்கைகளில் சந்தேகம் எழுந்த வங்கி ஊழியர், குறித்த சம்பவம் குறித்து பொலிசாரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விசாரணை அதிகாரிகள் இவரது அலுவலக அறையை சோதனையிட்ட போது அனைத்து சம்பவங்களும் வெளியானது. குறிப்பிட்ட நபரின் அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 4 பெட்டிகளில் தங்கம் இருந்ததை மீட்டுள்ளனர். மட்டுமின்றி ஒரு டப்பா வாசலின் இருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதிக கட்டுப்பாடுகள் மிகுந்த அந்த தொழிற்சாலையில் இருந்து இவர் தங்கம் கடத்த நூதன முறையை பயன்படுத்தி வந்துள்ளார்.

தினசரி பணி முடிந்து செல்லும்போது வாசலின் களிம்பில் தோய்த்த தங்கத்தை தனது மலத்துவாரம் வழியாக செலுத்தி மறைத்து வைத்து கடத்தியுள்ளார்.

தமது குடியிருப்பில் சென்று அதை வெளியே எடுத்து சுத்தப்படுத்தி சிறுகச் சிறுக விற்று காசாக்கியுள்ளார்.

இதுவரையில் இவர் இதுபோன்று கடத்திய தங்கத்தின் மொத்த மதிப்பு 180000 டொலர் என தெரிய வந்துள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News