ஓல்ட் மகாபோதியன்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ரி10 நொக் அவுட் கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் ஆற்றல்களை வெளிப்படுத்திய கொழும்பு ட்ரீம் இலவன் கிரிக்கெட் கழகம் (DREAM XI CC) சம்பியன் பட்டத்தை சூடியது.
கோட்டே ஆனந்த சாஷ்ட்ராலய விளையாட்டரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் மாஸ்டர்ஸ் சிசி அணியை 30 ஓட்டங்களால் வெற்றிகொண்டு ட்ரீம் இலவன் சம்பியனானது.
இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ட்ரீம் இலவன் நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 109 ஓட்டங்களைக் குவித்தது.
துடுப்பாட்டத்தில் ஆர். ஸ்ரீதரன் 39 ஓட்டங்களையும் நிரோஷன் வோல்டர் 30 ஓட்டங்களையும் அணித் தலைவர் எம். எஸ். பிரஷாந்த் 22 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் சம்பத் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹேமாஷன் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மாஸ்டர்ஸ் சிசி அணி 10 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 79 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
அதிகபட்சமாக 16 ஓட்டங்களை அசித்த பெற்றார்.
பந்துவீச்சில் வி. மோகன்ராஜ் 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜீ. அருண் ராம் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் எம்.எஸ். பிரஷாந்த் 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மைக்கல் ஜோசப் அன்தனி 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கால் இறுதிப் போட்டியில் சி.எவ்.சி.சி. அணியை 16 ஓட்டங்களால் ட்ரீம் இலவன் வெற்றிகொண்டது.
ட்ரீம் இலவன் 10 ஓவர்களில் 104 – 4 விக். (வோல்டர் நிரோஷன் 40, ஜே. பி. விதுர்ஷன் 25, என். தயாபரன் 15)
சி.எவ்.சி.சி. 10 ஓவர்களில் 88 – 8 விக். (மைக்கல் ஜோசப் அன்தனி 11 – 4 விக்.)
அரை இறுதிப் போட்டியில் ஓல்ட் மகாபோதியன்ஸ் அணியின் கடும் சவாலை முறியடித்து 8 ஓட்டங்களால் ட்ரீம் இலவன் வெற்றிபெற்றது.
ட்ரீம் இலவன் 10 ஓவர்களில் 97 – 8 விக். (ஆர். ஸ்ரீதரன் 34, ஜே. வி. விதுர்ஷன் 17)
ஓல்ட் மகாபோதியன்ஸ் 10 ஓவர்களில் 89 – 7 விக். (அக்ரம் 23, மைக்கல் ஜோசப் அன்தனி 6 – 3 விக்., ஜீ. அருண்ராம் 16 – 2 விக்.)
இறுதிப் போட்டி நாயகன்: வி. மோகன்ராஜ், சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்: ஆர். ஸ்ரீதரன். சுற்றுப் போட்டியில் சிறந்த பந்துவீச்சாளர்: மைக்கல் ஜோசப் அன்தனி.
ட்ரீம் இலவன் அணி: எம்.எஸ். பிரஷாந்த் (தலைவர்), வோல்டர் நிரோஷன் (உதவித் தலைவர்), மைக்கல் ஜோசப் அன்தனி, என். தயாபரன், ஜீ. அருண் ராம், சி. நிரஞ்சன், பி. விதுஷன் ஜெயக்குமார், வீ. மோகன்ராஜ், பி. ரெஹான் திமத்தி, ஆர். ஸ்ரீதரன்.
ட்ரீம் இலவன் அணிக்கு தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியின் பழைய மாணவர் ஆர். கஜதீபன் பயிற்சி அளித்துவருகிறார்.




ட்ரீம் இலவன் அணித் தலைவர் எம்.எஸ். பிராஷாந்த் வெற்றிக் கிண்ணத்தைப் பெறுவதையும் வீ. மோகன்ராஜ், ஆர். ஸ்ரீதரன், மைக்கல் ஜே. அன்தனி ஆகியோர் சிறப்பு விதுகளைப் பெறுவதையும் படங்களில் காணலாம்.