கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகரான ரானா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஏழுமலை’ எனும் படத்தில் இடம்பெற்ற ‘ராக்காட்சி ‘ எனும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் புனித் ரங்கசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஏழுமலை ‘எனும் திரைப்படத்தில் ரானா, பிரியங்கா அச்சார், ஜெகபதிபாபு , நாகாபரணா , கிஷோர் குமார் , சர்தார் சத்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டி. இமான் இசையமைத்திருக்கிறார்.
உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தருண் சுதிர் கிரியேட்டிவ்ஸ் மற்றும் டி எஸ் ஆர்ட்ஸ் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த திரைப்படத்தை நரசிம்மா நாயக் வழங்குகிறார்.
தமிழ் மற்றும் கன்னட மொழியில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராக்காட்சி ராக்காட்சி ஒன் அழக ஒரு தடவ பார்த்தாலே பறப்பேனே தூங்காமலே..’ எனத் தொடங்கும் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் யுக பாரதி எழுத பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். டி இமான் , யுக பாரதி, சித் ஸ்ரீராம் ஆகியோரின் வெற்றி கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்தப் பாடலில் ததும்பும் காதல் உணர்வு , மெல்லிசை , மெட்டு , பாடல் வரிகள் , காந்த குரல் , என அனைத்தும் ஒன்றிணைந்து இசை ரசிகர்களை வெகுவாக வசீகரிக்கிறது. இதன் காரணமாக இந்தப் பாடலுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது.