கடந்த ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகி ரசிகர்களின் பேரன்பினை பெற்ற விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான ‘சிறை’ எனும் திரைப்படம் – ஜீ 5 எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி குறுகிய கால அவகாசத்திற்குள்150க்கும் மேற்பட்ட மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்து புதிய சாதனையை படைத்திருக்கிறது.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். எஸ். லலித் குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் விக்ரம் பிரபு- எல். கே. அக்ஷய் குமார் – அனிஷ்மா – உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்து ஜஸ்டின் பிரபாகர் இசையில் உருவான இந்த படம் படமாளிகையில் வெளியான பிறகு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் யாரும் எதிர்பார்க்காத பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.
மலேசியாவில் நடைபெற்ற விஜய் நடிக்கும் ‘ஜனநாயகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியானதும் இந்த தளத்திற்கான வரவேற்பு கூடுதலாக அதிகரித்த நிலையில் தற்போது விக்ரம் பிரபுவின் ‘சிறை’ திரைப்படமும் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
மண் சார்ந்த உண்மை சம்பவங்களை தழுவி நேர்த்தியான அசல் இணைய தொடர்களை வழங்கி டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கும் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் ‘சிறை’ வெளியாகி இருப்பதும் அது சாதனை படைத்திருப்பதும் அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறது.
