வர்த்தக அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சதொச நிறுவனத்தின் ஊழியர்கள் சிலரை அவர்களின் உத்தியோகபூர்வ கடமைகளிலிருந்து நீக்கி அரசியல் பணிகளில் ஈடுபடுத்தியமையால் அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக குற்றம்சாட்டி முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட 3 பேருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று புதன்கிழமை (30) உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றைய தினம் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த வழக்கு மீதான விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.