ராயல் சேலஞ்சர்ஸ் நிர்ணயித்த 205 ரன்களை சேஸ் செய்து மிரட்டலாக வென்றுவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். வெற்றிக்குக் காரணம் என்ன? ராயுடுவின் அதிரடி..? தோனியின் சரவெடி..? பிராவோவின் டெத் பௌலிங்..? இவற்றையெல்லாம் ‘இதர காரணங்கள்’ பட்டியலில்தான் சேர்க்கவேண்டும். அப்போ, முக்கிய காரணம்… இன்னுமும் பெங்களூரு அணியில் கோரி ஆண்டர்சன் இருக்கிறார். ஆனால், பௌலர் வோக்ஸ் இல்லை; கோரிக்கு 4 ஓவர்; அதிலும் கடைசி ஓவர்… வாஷிங்டனுக்கு ஒரே ஓவர், 8-வது ஓவர் முடிவில் உமேஷ் யாதவின் ஸ்பெல் முடிந்தது… – ஜஸ்ட் கேப்டன் கோலி திங்ஸ்..!
பெங்களூருக்கு தண்ணி காட்டிய சென்னை சூப்பர்கிங்ஸ்! – மீம்ஸ் மேட்ச் ரிப்போர்ட்
டாஸ் வென்றதும் பௌலிங் செய்த தோனி, அணியில் இரண்டு மாற்றங்கள் என்று அறிவிக்கிறார். கரண் ஷர்மாவுக்கு பதில் ஹர்பஜன். ஆர்.சி.பி-யில் இரண்டு இடதுகை பேட்ஸ்மேன்கள். அதற்காக பாஜி! இன்னொரு மாற்றம்தான் சூப்பர் கிங்ஸ் ரசிகர்களை வியக்க வைத்தது. டு ப்ளெஸ்ஸிக்குப் பதிலாக தாஹிர். `எதுக்கு ஒரு பேட்ஸ்மேனுக்குப் பதில் எக்ஸ்ட்ரா பௌலர்?’ குழம்பினார்கள். அதற்கு இரண்டு காரணங்கள் : பேட்ஸ்மேன் கோலி, டி வில்லியர்ஸ் இருவரையும் சமாளிக்க ஒரு கூடுதல் பௌலர் தேவை. ஆர்.சி.பி-யின் பந்துவீச்சுக்கு ஐந்து பேட்ஸ்மேன்களே போதும்! பிளான் சக்சஸ்.