Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல்

October 9, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
ஐ.நா மாநாட்டில் சர்ச்சையாக மாறிய அநுரவின் கூற்று! கிளம்பும் விமர்சனங்கள்

ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் இரட்டை வேடம் 

தொடர்ந்து பேசிய அவர், “ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தீர்மானத்தை வாய்மொழி மூலம் நிராகரித்த அரசாங்கம் வாக்கெடுப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்ற அனுமதித்துள்ளது.

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல் | Govt That Made The Tamil Diaspora Happy In Geneva

இந்தப்பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வெற்றியளிக்கும் வகையில் பல நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இணை அனுசரணை நாடுகளின் சார்பாக பிரித்தானியா விடுத்த அழைப்புக்கு ஏற்ப வாக்கெடுப்பு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஏன் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது.யாரை சந்தோசப்படுத்தப் போகிறது. புலம்பெயர் தமிழர்களையா? அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையா? இல்லையென்றால் ஒரு மனதுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள்.

அபிவிருத்தி திட்டங்கள்

நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அபிவிருத்தி திட்டங்களை பொறாமையுடன் எதிர்க்காமல் இருந்திந்தால் இன்று அதிவேக நெடுஞ்சாலைகளை ஜனாதிபதிக்கு திறந்து வைத்திருக்கலாம்.

ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்திய அரசாங்கம்! ஆவேசத்தில் நாமல் | Govt That Made The Tamil Diaspora Happy In Geneva

ஆனால் இன்று வீதிகள் அமைக்கப்பட வேண்டும் என நினைப்பதை நாம் பாராட்ட வேண்டும்.கிராமத்துக்கு காபட் போட்டாள் அதில் சாப்பிட முடியுமா?என்று கேட்டவர்கள் கிராமிய வீதிகளை அமைப்பது வரவேற்கத்தக்கதாகும்.” என்றார்.

Previous Post

‘ரத்தக்கண்ணீர்’ படக் காட்சிகளை மீளுருவாக்கம் செய்திருக்கும் ‘ஆண்பாவம் பொல்லாதது’ படக் குழு

Next Post

உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

Next Post
உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

உடைக்கப்பட்ட “அணையா விளக்கு” தூபியை புனரமைக்கும் பணிகள் ஆரம்பம்!

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures