காளி படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள படம் கொலைகாரன். ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கியுள்ள இந்த படத்தில் அர்ஜூனும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஆஷிமா நர்வால் நாயகியாக நடித்துள்ளார். சைமன் கே.கிங் என்பவர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரைலர் வெளியாகி பெரிய அளவில் ரீச்சான நிலையில், மே 24-ந்தேதி படம் திரைக்கு வருவதாக இருந்தது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதியை ஜூன் மாதம் 5ந் தேதிக்கு மாற்றியுள்ளனர். அதை ஒரு வீடியோவாக கொலைகாரன் படத்தின் சில காட்சிகளோடு வெளியிட்டுள்ளது படக்குழு.













