தமிழில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல், இப்போது அதன் இரண்டாம் பாகத்தையும் தொகுத்து வழங்குகிறார். ஜூன் 17-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது. அதேப்போல் தெலுங்கில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தை ஜூனியர் என்டிஆர் தொகுத்தளித்த நிலையில், இரண்டாம் பாகத்தை நானி தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சி ஜூன் 10-ந்தேதி முதல் ஒளிபரப்பாகிறது.
இந்த நிலையில், மலையாளத்திலும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை மோகன்லால் தொகுத்து வழங்குகிறார். அதற்கான டீசரை கடந்த மே 2-ந்தேதி வெளியிட்டார் மோகன் லால். ஜூன் 24-ந்தேதி முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. மேலும், மோகன்லால் சின்னத்திரைக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.