Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் நடிகர் பாலஹாசனின் ‘ரேகை’ கிரைம் திரில்லர் இணைய தொடர்

November 19, 2025
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் நடிகர் பாலஹாசனின் ‘ரேகை’ கிரைம் திரில்லர் இணைய தொடர்

பிரபல எழுத்தாளரான ராஜேஷ் குமார் எழுதிய க்ரைம் நாவல் ஒன்றினை தழுவி தயாராகி இருக்கும் ‘ரேகை’  எனும் கிரைம் திரில்லரான இணைய தொடர் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.

எழுத்தாளர் எம். தினகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரேகை’ எனும் இணைய தொடரில் பாலஹாசன், பவித்ரா ஜனனி, போபலன், பிரகதேஷ், வினோதினி வைத்தியநாதன், ஸ்ரீ ராம் ,அஞ்சலி ராவ், இந்திரஜித் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

குற்ற சம்பவம் தொடர்பான தடயவியல் புலனாய்வு விசாரணையை மையப்படுத்திய இந்த இணைய தொடரை எஸ் எஸ் குரூப் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். சிங்காரவேலன் தயாரித்திருக்கிறார்.

ஏழு அத்தியாயங்களை கொண்ட இந்த க்ரைம் திரில்லர் ஜேனரிலான அசல் இணையத் தொடர் ஜீ 5 டிஜிட்டல் தளத்தில் எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகிறது.

இந்த இணைய தொடர் குறித்து இயக்குநர் பேசுகையில், ” எம்முடைய கண்ணுக்குத் தெரியாமல் நடக்கும் ஒரு வன்முறையை இந்த இணையத்தொடர் விவரிக்கிறது. காவல் நிலையத்தில் புகாராக கூட பதிவாகாத அந்த வன்முறையால் பாதிக்கப்படும் குடும்பங்களை பற்றிய உணர்வுபூர்வமான பின்னணியை விவரிக்கிறது.

இந்த இணையத் தொடருக்கான கதை கரு எழுத்தாளர் ராஜேஷ் குமாரின் நாவலில் இருந்து எடுத்தாளப்பட்டாலும்.. பார்வையாளர்கள் அனைவருக்கும் நெருக்கமாக இருக்கும் வகையில் இதன் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

Previous Post

பாலியல் சேட்டையில் விட்ட இளைஞன் | விரைந்து நடவடிக்கை | நியூசிலாந்துப் பெண் நன்றி தெரிவிப்பு

Next Post

NPP ஆட்சியில் வடக்கில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை: ஒப்புக்கொண்ட செல்வம் எம்.பி

Next Post
செல்வம் அடைக்கலநாதனின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு: ஆராய கூடியுள்ள குழுக் கூட்டம்!

NPP ஆட்சியில் வடக்கில் இராணுவ முகாம் அமைக்கப்படவில்லை: ஒப்புக்கொண்ட செல்வம் எம்.பி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures