ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்கு நாளை (17) அமெரிக்கா செல்லவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உலக நாடுகளின் பல முக்கிய அரச தலைவர்களைச் சந்தித்துப் பேச உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் நாயகம் அன்டோனியோ கட்ரஸ், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின், ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்கல், கனடாவின் பிரதமர் டுருடூ உள்ளிட்ட பலரைச் சந்திக்க எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 72 ஆவது கூட்டத் தொடரில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பொதுச் சபையில் உரையாற்றவுள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.