Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி திடீர் தீர்மானம் : ஊரடங்கு சட்டம் நீக்கம்

March 8, 2018
in News, Politics, Uncategorized, World
0

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இன்று மாலை நான்கு மணிக்கு அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதோடு இதற்கான அறிவித்தலை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கியுள்ளார்.
கண்டி மாவட்டத்தில் வாழும் பொது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்தும் கொள்ளும் வகையிலேயே இந்த ஊரடங்கு சட்டத்தை தற்காலிகமாக தளர்த்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

இதனடிப்படையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் இன்று மாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10.00 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போது நிலவும் குழப்ப நிலைமைக்கு மத்தியில், கலகம் விளைவிக்கும் வகையில் செயற்படும் தரப்பினரை உடன் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்ள அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சபை பிரதானிகளின் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் இந்த சேவை நிலையம் செயற்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 0711 261 261 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தகவல்களை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்கள், பொலிஸ் அதிகாரிகள், முப்படை வீரர்கள், தவிர்ந்த ஏனையவர்கள், ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் வீதியில், ரயில் நிலையங்கள், பூங்காக்கள், களியாட்ட இடங்கள் மற்றும் பொது இடங்களில் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான இடங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் குறித்த பிரிவினருக்கு அறிவித்து அப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் அனுமதியை எழுத்துமூலம் பெறவேண்டும் என நேற்று மாலை பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்குச் சட்டத்தை மீறுதல், அவசர நிலைமை சட்டத்திற்கேற்ப தண்டனை வழங்க முடியுமான குற்றம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு சுமூகமான நிலைமை பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகபேச்சாளர் தெரிவித்தார்.

ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும், கண்டி வரை வழமைப் போல ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படும் என ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான ரயில் சேவையும் வழமைப் போல முன்னெடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே , கண்டி நகரூடாக முன்னெடுக்கப்படும் நெடுந்தூர பஸ் சேவைகளை பொலிஸ் பாதுகாப்புடன் முன்னெடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஜீ.எச்.ஆர்.பீ. சந்திரசிறி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, கொழும்பு – பிபிலை, கொழும்பு – வலப்பனை, கொழும்பு – மஹியங்கனை, கொழும்பு – மட்டக்களப்பு, கொழும்பு – அம்பாறை ஆகிய நெடுந்தூர சேவை பாதுகாப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனை தவிர, கண்டி, வத்தேகம மற்றும் தெல்தெனிய ஆகிய பகுதிகளிலிலிருந்து கொழும்பு நோக்கி சேவையில் ஈடுபடும் பஸ்களுக்கான பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஜீ.எச்.ஆர்.பீ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Previous Post

படையினர் பார்த்திருக்க தாக்குதல் நடத்துகிறார்கள்

Next Post

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மீது பிரபல நடிகை வழக்கு

Next Post

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மீது பிரபல நடிகை வழக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures