Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் கையால் பரிசில் வாங்க சந்தோசத்தில் வந்த சிறுவன், அழுது கொண்டு சென்றான்

October 22, 2017
in News
0
ஜனாதிபதியின் கையால் பரிசில் வாங்க சந்தோசத்தில் வந்த சிறுவன், அழுது கொண்டு சென்றான்

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் இன்று காலை 9.30 மணியளவில் “நில மெஹெவர ஜனாதிபதி மக்கள் சேவை” ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வின் போது இந்த வருடம் இடம்பெற்ற புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் பரிசில்கள் வழங்கப்படவிருந்த நிலையில் அக் கௌரவிப்பு இடம்பெறமால் மாவட்ட மாவட்டத்தில் முதலிடத்தினை பெற்ற மாணவர்களுக்கு மாத்திரம் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.

இதனையடுத்து ஏனைய மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த மனவேதனையுடன் சென்றதை காணக்கூடியதாகவிருந்தது.

இவ் விடயம் தொடர்பாக பெற்றோர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

“இவ்வருடம் இடம்பெற்ற புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கு வவுனியா பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் ஜனாதிபதியின் கைகளினால் பரிசில்கள் வழங்கப்படவுள்ளது, எனவே அனைவரும் உங்கள் பிள்ளைகளை வவுனியா சைவப்பிரகாச கல்லூரிக்கு அழைத்து வருமாறு பிரதேச செயலகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதனை நம்பி நாங்கள் எமது பிள்ளைகளுடன் வந்தோம். ஆனால் பரிசில்கள் எவையும் வழங்கப்படாமையினால் மிகுந்த வேதனையளிக்கின்றது. எனது மகன் இன்று காலை ஜனாதிபதியின் கையால் பரிசில் வாங்கவுள்ளேன் என சந்தோசத்தில் வந்தான். ஆனால் தற்போது அழுது கொண்டு செல்கின்றான்” என தெரிவித்தார்.

இது சம்பந்தமாக ஏற்பாட்டுக்குழுவுடன் தொடர்பு கொண்டு வினாவிய போது,

ஜனாதிபதிக்கு நேரமின்மை காரணமாகவே இவ் கௌரவிப்பு நிகழ்வு நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

Previous Post

நீதி வழங்கும் செயற்பாடுகளை அரசியல்மயப்படுத்தக் கூடாது – ஐ.நா நிபுணர் எச்சரிக்கை

Next Post

கட்டார் விமானத்தில் சிகரெட் பிடித்த, இலங்கை அதிகாரிக்கு வாழ்நாள் தடை

Next Post
கட்டார் விமானத்தில் சிகரெட் பிடித்த, இலங்கை அதிகாரிக்கு வாழ்நாள் தடை

கட்டார் விமானத்தில் சிகரெட் பிடித்த, இலங்கை அதிகாரிக்கு வாழ்நாள் தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

Sri Varasithi Vinayagar Hindu Temple, Scarborough

மாவீரர் மாதத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விடயம்: ஊடகப் போராளி கிருபா பிள்ளை

மாவீரர் மாதத்தில் நாம் சிந்திக்க வேண்டிய விடயம்: ஊடகப் போராளி கிருபா பிள்ளை

November 5, 2026
நீர்க்குமிழி | த. செல்வா

நீர்க்குமிழி | த. செல்வா

November 5, 2026
‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

‘பேய் பிடிச்சிருக்கு ‘ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

November 5, 2026
SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

SAFF சம்பியன் பட்டத்துக்கு 23 ஆண்டுகளாக காத்திருக்கும் பங்களாதேஷ் இன்று இரவு பூட்டானை சந்திக்கிறது

November 5, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures