செல்ஃபி எடுக்க வந்ததாக கூறி கிருஷ்ணா நதியில் கணவர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் விழுந்த கணவரை கிராம மக்கள் சாமர்த்தியமாக மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கட்லூரில் தாயப்பா- சின்னி என்ற தம்பதியினர் கிருஷ்ணா நதி அருகே சுற்றுலா வந்திருந்தனர்.
இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, மனைவி சின்னி திடீரென தனது கணவர் தாயப்பாவை ஆற்றில் தள்ளிவிட்டார்.
இந்த எதிர்பாராத சம்பவத்தால், தாயப்பா தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். இருப்பினும், அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக விரைந்து வந்து கயிறுகளின் உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
இதையும் படியுங்கள்: வெளிநாட்டு கல்வி, பட்டங்கள் மோகத்தில் கடனில் மூழ்க வேண்டாம் – தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் அறிவுரை
தன்னை கொல்ல திட்டமிட்டு ஆற்றில் தள்ளிவிட்டதாக தனது மனைவி சின்னி மீது தாயப்பா போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.