Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னையில் இலங்கை தூதரத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. போராட்டம்!

March 11, 2018
in News, Politics, Uncategorized, World
0

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகள் நடத்திவரும் கலவர தாக்குதலை கண்டித்தும்,சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்நடத்தியது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் ஜூனைத் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகைபோராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், வர்த்தகர் அணி மாநில தலைவர்முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், ஏ.கே.கரீம் மற்றும் சென்னை மண்டல நிர்வாகிகள்முன்னிலை வகித்தனர்.

முற்றுகை போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில செயலாளர் அச.உமர் பாரூக் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி பேசுகையில்; இலங்கையில் அம்பாறை, கண்டி,திகண மற்றும் தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பெளத்த பேரினவாதிகள் வன்முறைகளைகட்டவிழ்த்துவிட்டுள்ளனர். முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள்தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன.

கால் நூற்றாண்டு காலமாக ஈழத் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் நிகழ்த்திய இன அழிப்புக்கு பின்னால்தற்போது சிங்கள பேரினவாத அமைப்புகள் மூலம் அங்கு வாழும் சிறுபான்மை முஸ்லிம்கள் மீது கலவரத் தாக்குதல்கள்நடைபெற்று வருகின்றன. முன்னர் ஈழத் தமிழர்களுக்கு எதிராகக் கையாண்ட இனவெறித் தாக்குதலை, தற்போது முஸ்லிம் மக்களுக்கு எதிராகப் பிரயோகிக்கத் தொடங்கியிருக்கிறார்கள் சிங்கள பேரினவாத பெளத்த அமைப்புகள்.குடிபோதையில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக போலியான பிரச்சாரங்கள்மூலம் பொதுபல சேனா உள்ளிட்ட சிங்கள பேரினவாதிகள் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது கலவரத் தாக்குதலை நடத்திவருகின்றனர். இதன் பின்னணியில் முன்னாள் அதிபர் ராஜபக்ஷேவின் கொடுங்கரங்கள் இருப்பதாகவும் செய்திகள்தெரிவிக்கின்றன.

காவல்துறை, ராணுவத்தின் முன்னிலையே முஸ்லிம்களின் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்படுகின்றன. இந்த சம்பவத்தில்முஸ்லிம் இளைஞர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளார். பாதுக்காப்புக்கு நிறுத்தப்பட்ட ராணுவத்தினரின்முன்னிலையிலேயே பெளத்த பேரினவாத புத்த பிக்குகள் கலவரத்தை தூண்டி வருகின்றனர்.இந்த சூழலில் இலங்கையில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனினும் முஸ்லிம்களுக்கு எதிராக அங்குவன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2014 ஆம் ஆண்டு சிங்கள பேரினவாத பெளத்த அமைப்பான பொதுபல சேனாவினர் முஸ்லிம்கள் அதிகமாகவசிக்கும் பகுதிகளுக்குள் ஊர்வலமாக வந்து தாக்குதலை ஆரம்பித்ததும், அரசு ஊரடங்குச் சட்டம் விதித்து முஸ்லிம்மக்களை வீடுகளுக்குள் முடங்கச் செய்தது. ஆண்கள் பள்ளிவாசலிலும், பெண்களும் குழந்தைகளும் வீடுகளுக்குள்சிறைப்படுத்தப்பட்ட பின்னர், ஓர் இடம்கூட விடாமல் தேடிப் பிடித்துத் தாக்கினார்கள் பொதுபல சேனா அமைப்பினர். அந்தத்தாக்குதல்கள் காவல்துறை முன்னிலையிலேயே நடைபெற்றது. நான்கு பேர் படுகொலை செய்யப்பட்டனர். தற்போது அதுபோன்றதொரு சூழல் மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுள்ளது.

ஈழத்தமிழர்கள் மீதான இன அழிப்பிற்கு பிறகு, சிறுபான்மை முஸ்லிம்கள் மீது திட்டமிட்டு சிங்கள பேரினவாதிகள் மூலம்வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுள்ளன.இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் இத்தகைய கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்தவேண்டும். இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இனவெறி வன்முறைகளைகட்டுப்படுத்த தவறிய இலங்கை அரசிற்கு ஐ.நாவும், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் அழுத்தம் தந்து இனவெறிவன்முறைகளை தடுத்து நிறுத்த முன்வர வேண்டும். என தெரிவித்தார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Previous Post

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு

Next Post

தெல்தெனிய மோதல் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி

Next Post

தெல்தெனிய மோதல் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026

Recent News

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பாடசாலை பரீட்சைகள் மற்றும் விடுமுறை – கல்வி அமைச்சின் அறிவிப்பு

June 1, 2026
19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 1 மில்லியனை கடந்தது

June 1, 2026
ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்?  பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் 2026 சம்பியன் பட்டத்தை சூடப்போவது யார்? பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று பலப்பரீட்சை

May 31, 2026
ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

ராஜபக்ச ஆட்சியில் தான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொலை | ஞா. சிறிநேசன்

May 31, 2026
  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures