‛ஏ1′ படத்தை அடுத்து கண்ணன் இயக்கும் ஒரு படம், தில்லுக்கு துட்டு 3 படங்கள் சந்தானம் நடிப்பில் உருவாக உள்ளன. அடுத்து, இவர் மூன்று வேடங்களில் நடிக்கும் சயின்ஸ் பிக்சன் படம் தயாராகிறது. கார்த்திக் யோகி இயக்கும் இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ராஜேஷ் தயாரிக்கிறார்.
படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி உள்ளது. படத்திற்கு ‛டிக்கிலோனா’ என பெயரிட்டுள்ளனர். அர்ஜூன் நடிப்பில் வெளியான ‛ஜென்டில்மேன்’ படத்தில் நடிகர் செந்தில் டிக்கிலோனா என்றொரு விளையாட்டு பெண்களுடன் இணைந்து விளையாடுவார். அதை கவுண்டமணி வந்து கலாய்ப்பார். அதையே படத்திற்கு தலைப்பாக்கி உள்ளனர். சந்தானம் இப்படத்தில் ஹீரோ, வில்லன், காமெடியன் என மூன்று விதமான வேடங்களில் நடிக்கிறார்.