நடிகர் அருண் விஜய் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரெட்ட தல’ படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரெட்ட தல’ எனும் திரைப்படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், யோகி சாமி, ஜோன் விஜய், ஹரீஷ் பெராடி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். டிஜோ டாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்.
கொமர்சல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிடிஜி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பொபி பாலசந்திரன் தயாரித்திருக்கிறார்.
இரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டத்தில் கதை இந்தியாவில் உள்ள கோவா பின்னணியில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருப்பதால்.. மேலத்தேய இசை பின்னணியில் காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்கிறது.
எக்சன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்த கிளர்வோட்டம் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.