“சில் ஆடை” வழக்கு தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் நாளை (11) மேற்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ய கூட்டு எதிர்க் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி சட்டத்தரணி காலிங்க இந்திரதிஸ்ஸவினால் இந்த மனு முன்வைக்கப்படவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்கு சட்ட நடைமுறையின் 331 ஆம் உறுப்புரையின் கீழ் இந்த மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோர் குற்றவாளிகளாக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.