ஹெரோயினுடன், விளக்கமறியல் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இக்கைது, பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிசர உயன் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டு குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொரளை, சிறிசர உயன் பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை விசாரணையின் பின்னர் மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் எடுத்துள்ளனர்.
சந்தேகநபரிடம், மேல் மாகாண வடக்கு குற்றப் பிரிவினர் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













