Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சிறந்த சமூகத்தின் ஆணிவேர் பெண்ணாவாள்

March 8, 2019
in News, Politics, World
0

சிறந்த சமூகமொன்றுக்குப் பெண்கள் வழங்கும் வினைத்திறன்மிக்க பங்களிப்பினைப் பாராட்டி, ஊக்குவித்து அவர்களின் முன்னோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாகவும், உதவியாகவும் இருப்பதற்கு உறுதி பூணுவோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் விடுத்திருக்கும் சர்வதேச மகளிர் தினச் செய்தியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆண் மற்றும் பெண்ணின் சமமான சமூகப் பயன்பாட்டினை வலுவூட்டுவதற்கு மிகவும் பொருத்தமான சிறப்பான சந்தர்ப்பமொன்று இன்று உலகில் உருவாகியுள்ளது. தற்போது புதிய உலகில் தொழில்நுட்பம், தொடர்பாடல், கல்வி, விஞ்ஞானம், இலக்கியம், கலை, கலாசாரம் ஆகிய அனைத்துத் துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகக் காணப்படுகிறது.

அதேபோன்று உலகில் நிலைபேறான வாழ்க்கை இருப்பினை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பல தடைகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில், பெண்கள் அளவிலாத அர்ப்பணிப்புக்கள், தியாகங்களைச் செய்து சிறந்த முன்னேற்றத்தை நோக்கிப் பயணித்துள்ளனர்.

அவள் இதுவரை பெற்றுக்கொண்ட வெற்றிகள் அனைத்தும் ஒட்டுமொத்த சமூகமும் பெற்றுக்கொண்ட வெற்றியாகும். ஏனெனில் பெண்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் மிகவும் முக்கியமான பங்களிப்பினை வழங்குகின்றனர் எனவும் பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

உலக அரசியலில் முதலாவது பெண் பிரதமரை உருவாக்கியது இலங்கை

Next Post

தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தை கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் அரசு

Next Post

தீவிரவாத அமைப்பின் அலுவலகத்தை கைப்பற்றியுள்ள பாகிஸ்தான் அரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures