சிரியாவில் பூகம்ப இடிபாடுகளிற்கு இடையில் தாயின் தொப்புள்கொடி துண்டிக்கப்படாத குழந்தையை குடும்பமொன்று தத்தெடுத்துள்ளது.
குழந்தையின் உறவினர் முறையாவர்களே அதனை தத்தெடுத்துள்ளனர்
ஆயிரக்கணக்கானவர்கள் குறிப்பிட்ட குழந்தையை தத்தெடுப்பதற்கு விருப்பம் வெளியிட்டிருந்த நிலையில் குழந்தையை அதன் உறவினர்கள் குடும்பமொன்று தத்தெடுத்துள்ளது.
தத்தெடுத்த பெண் குழந்தையின் உறவினர் என்பது மரபணுபரிசோதனையின் மூலம் உறுதியானதை தொடர்ந்து அந்த குழந்தையை மருத்துவர்கள் குறிப்பிட்ட குடும்பத்திடம் ஒப்படத்துள்ளனர்.
இனி இவள் என் குழந்தை என குழந்தையை தத்தெடுத்த காலில் அல் சவாடி தெரிவித்துள்ளார்.
நான் எனது குழந்தைகளிற்கும் இவளிற்கும் இடையில் வித்தியாசம் காட்டப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தாயின் பெயரையே குழந்தைக்கு சூட்டியுள்ளனர்( அவ்ரா) குழந்தையை மீட்டவேளை அயா என பெயரிட்டிருந்தனர்.
குழந்தையின் குடும்பத்தவர்கள் அனைவரும் பூகம்பத்தில் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த குழந்தைக்கு வேறு யாரும் இல்லை என்பதால் எங்களிற்கு இந்த குழந்தை முக்கியமானது என குழந்தையை தத்தெடுத்த சவாடி தெரிவித்துள்ளார்.
அவள் எனக்கும் அவளது உறவினர்களிற்கும் அவளது கிராமத்தை சேர்ந்த அனைவருக்கும் ஒரு நினைவாக விளங்குவாள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.