ஆந்திர மாநிலம் ராயலசீமா மாவட்டத்தின் உய்யலவாடா பகுதியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி நரசிம்ம ரெட்டி. அவரது வாழ்க்கை வரலாற்றை சைரா நரசிம்ம ரெட்டி என்ற பெயரில் படமாக்கி வருகின்றனர்.
பாகுபலி படத்துக்குப் பின், மிகுந்த பொருட்செலவில் தயாராகும் இந்தப் படத்துக்கு இதுவரை 240 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தில், நரசிம்ம ரெட்டி கேரக்டரில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக, நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
விரைவில் வெளியாக இருக்கும் இந்தப் படம், தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதில், தமிழ் மொழியில் எடுக்கப்பட்டிருக்கும் படத்தில், சிரஞ்சீவியின் கேரக்டருக்கு, தமிழில் டப்பிங் பேசப் போகிறவர் நடிகர் அரவிந்த்சாமி என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

