மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான படம் மகாநடி.. தமிழில் நடிகையர் திலகம் என்கிற பெயரில் வெளியான இந்தப் படத்தை நாக் அஸ்வின் என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
சொல்லப்போனால் கீர்த்தி சுரேஷ் நடித்த படங்களிலேயே அவர் ரொம்பவும் மெனக்கெட்டு தனது தோற்றத்தையும் உடல் எடையையும் மாற்றி நடித்த படம் இதுவாகத்தான் இருக்கும். அந்த அளவிற்கு அவரது மற்ற படங்களைவிட இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை அமலாபால் பேசும்போது, மகாநடி படத்திற்காக சாவித்ரியாக நடிக்க முதலில் தன்னைத் தான் அணுகினார்கள் என்றும், ஆனால் தனது தனிப்பட்ட சொந்த காரணங்கள் காரணமாக அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது என்றும் கூறியுள்ளார்.