நடிகர் ரஜினி கிஷன் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘ரஜினி கேங்’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ஹாரர் கொமடி ஜேனரிலான இந்த டீசருக்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால்.. வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது
இயக்குநர் எம். ரமேஷ் பாரதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரஜினி கேங்’ எனும் திரைப்படத்தில் ரஜினி கிஷன், திவிகா உள்ளிட்ட பலர் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். என். எஸ். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எம். எஸ். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்திருக்கிறார். ஹாரர் கொமடி ஜேனரிலான இந்த திரைப்படத்தை மிஸ்ரி என்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி எஸ் பதம்சந்த்- சி. அரியாந்ராஜ்- ரஜினி கிஷன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இந்த டீசரில் வி எஃப் எக்ஸ் காட்சிகள் அதிகமாக இடம் பிடித்திருப்பதால்… ரசிகர்களை ஓரளவு கவர்ந்திருக்கிறது.