சர்வதேச மட்ட இளம் கண்டுபிடிப்பாளர் போட்டிக்காக கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் ஏ.எம்.முஹம்மட் ஸவ்பாத் செப்டம்பர் மாதம் 19 ம் திகதி இந்தோனேசியா பயணம் .
விஞ்ஞான தொழினுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழு இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் இனைந்து நடாத்திய “”” Innova Minds-2017 “”” என்ற இலங்கை பொருளாதார அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்தும் புதிய கண்டுபிடிப்புக்களை தெரிவு செய்தல் என்ற தேசிய ரீதியான இளம் கண்டுபிடிப்பாளர் போட்டியில் இறுதி சுற்று வரை சென்று வெற்றி பெற்ற மாணவன் அப்துல் மஜீட் முஹம்மட் ஷஃபாத் இம் மாதம் 20 – 25 ம் திகதி வரை இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் உள்ள மெர்கு பானே பல்கலைக்கழகத்தில் [ The 4th International Young Inventors Award -2017 mercu buana university, Jakarta, Indonesia ] நடைபெறும் சர்வதேச கண்டுபிடிப்பாளர் போட்டியில் தனது கண்டுபிடிப்பினை காட்சிப்படுத்தும் வாய்ப்பினைப் பெற்று இம் மாதம் (செப்டம்பர்) 19 ம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தோனேசியா பயணமாகவுள்ளார்.
இம் மாணவனோடு இலங்கையில் இருந்து மொத்தமாக 6 பாடசாலையில் இருந்து 7 மாணவர்கள் செல்ல உள்ளனர். அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இருந்து இம் மாணவன் மட்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
