சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்துள்ள ஒப்பந்தத்தில் இணங்க முடியுமான விடயங்களில் இனங்குவோம். முடியாத விடயங்களில் எமது நிலைப்பாடை வெளிப்படையாக தெரிவிப்போம், அத்துடன் இந்த நாடு இந்தளவு வங்குராேத்து நிலைக்கு செல்ல காரணமும் இந்த அரசாங்கமாகும். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை தடுத்தவர்களே தற்போது ஆடுதோல் போர்திய ஓநாய்கள் போன்று செயற்பட்டு வருகின்றனர்.
ஆனாலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொள்ள எதிர்க்கட்சியினால் செய்யவேண்டிய கடமையை முழுமையாக நாங்கள் செய்தோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் புதன் கிழமை (22) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பாக ஜனாதிபதியின் உரை மீதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஏகாதிபத்திய நாடு அல்ல. ஜனநாயக நாடு. அதனால் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்குமாறு தெரிவித்ததுடன் எமக்கு ஆதரவளிக்க முடியாது. சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணைகள் தொடர்பாக நங்கு ஆராய்ந்து, இணங்க முடியுமான விடயங்களுக்கு எமது இணக்கப்பாட்டை தெரிவிப்போம். அதேநேரம் இனங்க முடியாத விடயங்கள் தொடர்பில் எமது நிலைப்பாட்டை தெரிவிப்போம்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லும் வேலைத்திட்டம் 2018 காலத்தில் இருந்தது. அன்று ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த அரசாங்கத்தில் நாங்களும் அதன் பங்காளியாக இருந்தோம். ஆனால் கோத்தாய ராஜபக்ஷவின் செளபாக்கிய திட்டத்தின் மூலம் சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை தடுத்தனர். சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை தேசத்துராேகம் என்றே பிரசாரம் செய்துவந்தார்கள். ஆனால் இன்று சர்வதேச நாணய நிதியத்தின் பணத்தை எடுத்துக்காெண்டு பட்டாசு கொளுத்துகின்றனர்.
அதனால் அன்று சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை தடுத்தவர்களே தேசத்துராேகிகள் என்பதை ஜனாதிபதிக்கு தெரிவிக்கிறோம். இவர்கள் தான் ஓநாய்கள். தற்போது இந்த ஓநாய்கள் தற்காலிகமாக ஆட்டுத்தோல் போர்த்திக்கொண்டிருக்கின்றன. ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்கள் தற்போது ஜனாதிபதி எதைச் சொன்னாலும் அதற்கு கைதட்டி வருகின்றனர். அந்தளவுக்கு அடிமையாகி இருக்கின்றனர்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் பிரேரணையுடன் இணங்குமாறு ஜனாதிபதி தெரிவிக்கிறார். இனங்க முடியுமான இடங்களில் நாங்கள் எமது ஆதரவை தெரிவிப்போம்.
சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஆசியி அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகள் என அனைவரையும் எதிர்கட்சி சந்தித்தபோது, எமது நாட்டுக்கு உதவி செய்யுமாறே நாங்கள் தெரிவித்தோம். சர்வதேச நாணய நிதியத்தின் பணம் தானாக வந்து விழவில்லை.
அதற்காக எதிர்க்கட்சியினால் செய்யவேண்டிய கடமையை முழுமையாக நாங்கள் செய்தோம். நாங்கள் துராேகம் செய்ததாக பொய் சொல்லக்கூடாது. அப்படியானதொரு காலமும் இருந்தது. அந்த மோசமான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்ளப்போவதில்லை.
இந்நாட்டிலுள்ள 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையோடு தாம் விளையாடவில்லை அவர்களின் வாழ்க்கையை மரண விளிம்புக்கு கொண்டு செல்ல செயற்பட வில்லை .
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட குழுவுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை வெளிப்படுத்துமாறு நாங்கள் பல தடவைகள் தெரிவித்தபோதும் அதனை வெளிப்படுத்தவில்லை. அன்று அதனை வெளிப்படுத்தி எம்முடன் கலந்துரையாடி இருந்தால். இந்த ஒப்பந்தத்தை மேலும் பலப்படுத்தி இருக்கலாம்.
எமது கருத்துக்களை பிரேரணைகளை முன்வைத்திருப்போம். நாடு வங்குராேத்து என பிரகடனப்படுத்தி 5மாதங்களுக்கு பின்னரே சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் மட்ட குழுவுடன் ஒப்பந்தத்துக்கு செல்ல முடியுமாகி இருக்கிறது.
அதேபோன்று முதலாம் கட்ட பணத்தை பெற்றுக்கொள்ள 10மாதங்கள் கடந்துள்ளன. அரசாங்கம் இதனை இழுத்தடித்துக்கொண்டு சென்றதே இதற்கு காரணமாகும். அதனால் நாட்டு மக்களுக்கு அதிக நன்மைபயக்கும் ஒப்பந்தமாக இந்த ஒப்பந்தத்தை செய்ய முடியாமல் போயிருக்கிறது.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்துக்கு கொள்கையளவில் நாங்கள் ஆதரவு. ஆனால் சாதாரண மக்களை நசுக்கும் வகையில் ஒப்பந்தம் செய்வதை நாங்கள் விரும்பவில்லை. 1965இல் இருந்து நாங்கள் 16 தடவைகள் சரவ்தேச நாணய நிதியத்துக்கு சென்றிருக்கிறோம். ஆனால் இந்தளவு மக்களை நசுக்கும் நிபந்தனை விதிக்கவில்லை.
என்றாலும் நாட்டை கட்டியெழுப்ப சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்வதை தவிர வேறு வழி இல்லை என்ற விடயத்தில் ஜனாதிபதியுடன் இணங்குகிறோம். அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துக்கு எதிராக இருந்தவர்கள் அட்டுத்தோல் போர்த்திக்கொண்டாவது ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதை வரவேற்கிறோம்.
எனவே எமது அரசாங்கத்தில் மக்களுக்கு நன்மை பயக்கும் பிரேரணைகளை சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தில் திருத்தம் மேற்கொள்வோம். சர்வதேச நாணய நிதியம் மாத்திரமல்ல, உலக வங்கி உட்பட அனைத்து நிறுவனங்களும் நிமிர்ந்து கலந்துரையாடடுவதற்கு தகுதியான குழுவொன்று எமது கட்சியிலே இருக்கின்றது அவர்களை பயன்டுத்திக்கொண்டு மக்களை வாழச்செய்யும் எந்த ஒப்பந்தத்துக்கு செல்வதற்கும் நாங்கள் தயார் என்றார்.