Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சரவணன் வெளியேற்றத்தில் சேரனுக்கு சந்தோஷம்?

August 7, 2019
in Cinema
0

டாஸ்க் ஒன்றில் விளையாடிய போது சேரனுக்கு காயம் ஏற்பட்டு, அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பது போன்ற காட்சிகள் இன்றைய புரொமோவில் இடம் பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினமும் ஏதாவது ஒரு பரபரப்பான சம்பவத்தை வைத்து டிஆர்பியை ஏற்றி விடுகிறார்கள். காலையில் இருந்தே மக்களுக்கு அன்றைய எபிசோடைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் வகையில் அவர்கள், மூன்று புரொமோக்களை வெளியிடுகின்றனர். அந்தவகையில் தற்போது வெளியாகியுள்ள புரொமோவில் டாஸ்க் ஒன்றில் சேரன் அடிபட்டு கீழே படுத்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஏற்கனவே, சரவணனின் அதிரடி வெளியேற்றம், அதனால் அழுத போட்டியாளர்கள் என கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் வீடு அல்லோகலப் பட்டிருந்தது. இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்காக போட்டியாளர்களுக்கு ஜாலியான டாஸ்க் ஒன்றை பிக் பாஸ் கொடுத்திருக்கிறார் போலும். போட்டியாளர்களும் ஆர்வமுடன் இந்த டாஸ்க்கை விளையாடுகின்றனர்.

இதில் கில்லர் காயின் யாரிடம் இருக்கிறதோ அவர்களது மதிப்பெண்கள் பாதியாக குறைக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. போட்டியாளர்கள் இரண்டு இரண்டு பேராக சேர்ந்து இந்த டாஸ்க்கை விளையாடுகின்றனர். அப்போது ஒருவரை ஒருவர் துரத்துகின்றனர். எதிராளியிடம் இருந்து தப்பிக்க மற்ற போட்டியாளர்கள் கண்மண் தெரியாமல் ஓடுகின்றனர்.

இதில் முதலில் வீட்டுக்குள் சாண்டி விழுகிறார். ஆனால், அவருக்கு காயம் ஏற்பட்டதா எனத் தெரியவில்லை. ஆனால், சேரனுக்கு எப்படியோ காயம் ஏற்பட்டிருக்கிறது. அவர் கீழே விழுந்து விட்டாரா அல்லது அதிகம் ஓடியதால் மூச்சிரைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளாரா எனத் தெரியவில்லை.

கார்டன் ஏரியாவில் சேரன் படுத்திருக்க, அவரைச் சுற்றி சக போட்டியாளர்கள் அமர்ந்திருக்கின்றனர். டாஸ்க்கிற்காக போட்டிருந்த கோட்-ஐ கழற்றி விட்டு, மைக்கை எல்லாம் கழற்றி வைத்து விட்டு படுத்திருக்கிறார் அவர். நிச்சயம் அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டிருக்காது எனத் தெரிகிறது. அப்படி இருந்திருந்தால், சுற்றியிருக்கும் போட்டியாளர்கள் அழுவது போன்ற காட்சிகளை டிஆர்பிக்காக நிச்சயம் புரொமோவிலேயே காட்டி இருப்பார்கள்.

எனவே, இது லேசான காயமாகத்தான் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனாலும், இதனைக் காரணம் காட்டி சேரனை பிக் பாஸில் இருந்து வெளியேற்றி விடுவார்களோ என்பதே அவரது ரசிகர்களின் பெரும் கவலையாக இருக்கிறது. எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என அதிரடியாக பல டிவிஸ்ட்டுகளை வைத்து வருகிறார் பிக் பாஸ். எனவே, சேரனை நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றி விடக் கூடாது என்பதே பலரது பிரார்த்தனையாக உள்ளது. பார்ப்போம் அடுத்த புரொமோக்களில் என்ன வருகிறது என்ன?

Previous Post

சரவணன் எப்படி தெரியுமா வெளியே அழைத்து செல்லப்பட்டார்?

Next Post

‛கோமாளி’ படத்தின் அடுத்த சீண்டல்

Next Post

‛கோமாளி' படத்தின் அடுத்த சீண்டல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

தனியார் பஸ் சேவைகள் 50 சதவீதத்தால் குறைவடையும்

புதிய பேருந்து கட்டண திருத்தம் வெளியீடு: ஆரம்பக் கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயம்!

July 4, 2026
குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

குரோஷியாவுக்கு எதிரான கடினமான வெற்றியுடன் 16 அணிகள் சுற்றுக்குள் நுழைந்தது போர்த்துக்கல்

July 3, 2026
முல்லைத்தீவில் விளையாட்டுக் கட்டடத்தொகுதி தேவை – ரவிகரனால் தீர்மானம் முன்வைப்பு

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிர்மாணம் : தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்!

July 3, 2026
குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் ; கே.டி. லால்காந்த

July 3, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures