Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சரத்பொன்சேகா இறுதியுத்த சாட்சியம் வழங்குவார் என்றால்

October 16, 2025
in News, Sri Lanka News, முக்கிய செய்திகள்
0
மகிந்தவை தூக்கிலிட வேண்டும்! குற்றம் சுமத்திய விமல்

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா இறுதியுத்தத்தில் நடந்த விடயங்கள்  தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடாத்தப்படவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா இறுதி யுத்தத்தில் வெள்ளக்கொடி விவகாரம் தொடர்பில் சாட்சியம் வழங்க தயார் என கூறிவருபது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தம் தொடர்பில் சர்வதேச குற்றவியல்  விசாரணை நடைபெற்ரால் இனப்படுகொலை நிருபிக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கின்ற போது அதனை குழப்பும் விதமாக அரசாங்கத்துடன் இணைந்து செயற்படும் விதமாக சரத்பொன்சேகாவின் கருத்துக்களும் இருந்துவருகின்றது.

இறுதி யுத்தத்தின்போது இராணுவம் தொடர்சியாக  மக்களை அழிக்கின்ற நடவடிக்கைகளின்  கடும்  ஆட்லறி தாக்குதல்களை  மக்கள் மீது பயன்படுத்தி வந்த சுழலில் தமிழ் ஈழ விடுதலைப்புலிகள் மக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுவதற்கு கண்காணிக்கப்பட்ட ஒரு  பொறிமுறையை ஏற்படுத்துவதற்கு  என்னுடன் தொடர்புகளை மேற்கொண்டார்கள்.

அவ்வகையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துகின்ற  முயற்சிகளை மேற்கொண்டேன் . குறிப்பாக மே மாதம் 16 ஆம் திகதி  2009ஆண்டு பிற்பகல் முதல் இரவு 8 மணிவரை இருபக்க தொடர்புகளை மேற்கொண்டு  இணக்கப்பாடு எற்படுத்தப்பட்டது.

குறிப்பாக இரண்டு ஆயர்களான  இராயப்பு யேசவ் ஆண்டகை மற்றும்  கிங்சிலி சுவாம்பிள்ளை ஆண்டகையுடன்  அரசாங்கம் நேரடியாக தொடர்பு கொண்டு அரசதரப்பில் பசில் றாஐபக்‌ஷவும் நானும் வன்னி கட்டுபாட்டுக்கு சென்று  அங்கு தமிழிழ விடுதலைபுலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் நடேசன் அவர்கள் வெளியில் வந்து மக்களை பாதுகாப்பாக வெளியில் கொண்டுவருவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டது.

ஆனால் பேச்சு வெற்றிகரமாக முடிவடைந்தபோதும் இராணுவம் ஆட்லறி தாக்குதலை தொடர்ச்சியாக மேற்கொண்ட நிலையில் எதற்காக இதனை செய்கிறிர்கள் என்ற போது ஜனாதிபதி மகிந்தறாஜபக்‌ஷ நாட்டில் இல்லை அவர் நாடுதிரும்பிய பின்னர் தேசிய பாதுகாப்பு கூட்டத்தில் கலந்துரையாடியே முடிவு எடுக்கப்படும் என கூறப்பட்டது எனினும் அந்த கூட்டத்தில் முடிவுகளை எடுக்கப்படாது தொடர்சியாக மக்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டு வந்தத்து இதனை  ஏன்தொடர்ந்தும் இதனை செய்கிறிர்கள் என கேட்டபோது தேசிய பாதுகாப்பு கூட்டம் கூடும் வரை தாக்குதலை நிறுத்தமுடியாது என கூறப்பட்டது மேலும் வெள்ளக்கொடியுடன் தான் வரமுடியும் என கூறப்பட்டது இது சாத்தியப்பாடு இல்லாத விடயம் என்பதால் எனது இணக்கப்பாடு  நான் முடிவுறுத்திக் கொள்கிறேன்.

காரணம் சர்வதேச செஞ்சிலுவை அமைப்பின் மூலம் மக்களை பாதுகாப்பாக கொண்டுவருவதற்கு பல நடவடிக்கை எடுக்கப்பட்டு சரிவாராத நிலையில்தான் என்உடனான தொடர்பு மேற்கொள்ளப்பட்டது.

வெள்ளக்கொடி விவகாரம் ஏற்றுக்கொள்ளபடவில்லை காரணம் பேச்சுவார்த்தைகள் மூலம் இணக்கம் காணப்பட்ட போதும்  தொடர்ச்சியான ஆட்லறி தாக்குதல் மேற்கொள்ளப்படுவது மக்களை இல்லாது ஒழிப்பதற்கான சுழலைத்தான்  அரசு செய்தது என்பதே நான்கூறும் விடயம்.இது இனப்படுகொலையின் விவகாரமாகும்.

ஆனால் சரத் பொன்சேகா தற்போது கூறிவரும் விடயம் வெள்ளைக்கொடி விவகாரம் தொடர்பில் நான் கூறமுடியாது ஆனால் வெள்ளக் கொடி விவகாரம் எதற்காக என்பது வெள்ளக்கொடியுடன் வருபவர்களை  கொலைசெய்தார்கள் என்பது கடந்தகாலங்களில்  வெளிவந்த உண்மைகள் என்பது அனைவருக்கும் புரிந்த விடயம் ஆகும். 

சரத்பொன்சேகா  தற்போது கூறும் விடயம்  வெள்ளக்கொடிதொடர்பாக தான் சாட்சிவழங்க தயார் என்பது உள்ளக விசாரணைக்குள் விவகாரம் முடக்கப்படுவதற்கான அத்திவாரம் போடுகின்ற கருத்தாகவே  பார்க்கிறேன்.

காரணம் அரசாங்கத்திற்கு சர்வதேச குற்றவியல்  விசாரணை நடைபெற்ரால்  சர்வதேச மட்டத்தில் இலங்கை  அரசாங்கத்தின் இணக்கப்பாடு இல்லாமல் நடைபெற்ரால் அது இனப்படுகொலை என்ற விவகாரம் நிச்சயமாக நிருபிக்கப்படும் என்ற நம்பிக்கை எங்களிடம் இருக்கிறது.

அரசாங்கத்திற்கும் இந்த சந்தேகம் நிச்சயமாக இருக்கும் அதனால் சர்வதேச விசாரணையை எப்படியாவது தவிர்க்க வேண்டும் என்பதை நினைக்கிறார்கள்  இன்று தமிழ்மக்கள் மத்தியில் உள்ளக விசாரணைக்குள் முன்னேடுக்கவேண்டும் என்பதில் சில தமிழ் தலைவர்கள் என்ற நிலையில் குறிப்பாக சுமந்திரன் போன்றவர்கள் செயற்பட்டுவரும் நிலையில் அவர்களும் பலவீனப்பட்டு இருக்கும் நிலையில் தமிழ்மக்கள் உள்ளக விசாரணையை நிராகரிக்கிறார்கள் அதுவும் சர்வதேச குற்றவியல்  விசாரணையைத்தான் தமிழ் மக்களும் இணங்குகிறார்கள்.

அதுவும் இனப்படுகொலை விவகாரம் விசாரிக்கப்படவேண்டும் என்பதை  தான் பாதிக்கப்பட்ட மக்கள் விசாரிக்கபடவேண்டும் என்பதை உறுதிபடுத்தியிருக்கிறார்கள். 

இந்த சூழ்நிலையில் அவசரவசரமாக சர்வதேச விசாரணையை முடக்குவதற்காக  உள்ளக ரீதியாக எதோஒரு விசாரணை நடாத்தி ஏதோ ஒரு விசாரணை நடக்கிறது என்பதை காட்டி திசைதிருப்புவதற்கு இராணுவதளபதியே விசாரணைக்கு உட்படுகிறார் என்ற கருத்தை பாதிக்கப்பட்ட மக்களை நம்பவைக்கும் விடயமாகவே இந்த சாட்சி வழங்கும் கதையாகும்.

சரத்பொன்சேகா கூறும் வெள்ளக்கொடி விவகாரம் கோத்தபாஜ றாஜபக்‌ஷவும் எனைய தளபதிகளும் பொறுப்பேடுக்கவேண்டும் என அவர் சாட்சியம் வழங்குவார் என்றால்   சரத்பொன்சேகாவும் சர்வதேச குற்றவியல் விசாரணை தான்  நடாத்தவேண்டும் என்பதை அவர்  வலியுறுத்தவேண்டும் இதனை விடுத்து உள்ளக விசாரணைக்குதான் தயார் என்பதை  பாதிக்கப்பட்ட மக்கள் நம்பி அவ்வாறன பொறிமுறையை தவிர்த்துகொள்ள வேண்டும் என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Previous Post

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயானந்த வர்ணவீர காலமானார்

Next Post

பின் கதவால் வெளியேறியவர்களுக்கு வெட்கம் இல்லையா – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

Next Post
பின் கதவால் வெளியேறியவர்களுக்கு வெட்கம் இல்லையா – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

பின் கதவால் வெளியேறியவர்களுக்கு வெட்கம் இல்லையா – ஜோசப் ஸ்டாலின் கேள்வி

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures