நுவரெலியா- பொகவந்தலாவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாணிக்கல் அகழ்வில் ஈடுபட்ட 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொகவந்தலாவ, டின்சின் போன்ற பகுதிகளை சேர்ந்தவர்களையே இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைது செய்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நீண்ட காலமாக சுற்றுப்புற சூழலுக்கு தீங்கு ஏற்படும் வகையில் மாணிக்க கல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இதன்போது, கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மாணிக்க கல் அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளதுடன் அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













