Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்டவிரோதமாக பிரான்ஸ் செல்ல முயன்றவர்களில் இருவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

April 3, 2019
in News, Politics, World
0

சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக பிரான்ஸ் நாட்டுக்குச் செல்ல முயன்ற 11 பேரில் 2 பேருக்கான விளக்கமறியல் வரும் 11 திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஏனையோரில் சிறுவர்கள் இருவரை விடுதலை செய்யுமாறும் மிகுதி ஏழு பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் புத்தளம் மாவட்ட நீதவான் அனுர இந்திரஜித் புத்ததாஸ உத்தரவிட்டுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை கடல் மார்க்கமாக சட்டவிரோதமாக பிரான்ஸூக்கு செல்லும் நோக்குடன் வாகனத்தில் உடப்பிற்குச் சென்று கொண்டிருந்த குறித்த 11 பேரும் புத்தளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் கைதுசெய்யப்பட்டு இன்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதனிடையே, இந்த விடயம் இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், பெண்ணொருவர், இரு சிறுவர்கள் உள்ளிட்ட பதினொரு பேரில் முதலாம் மற்றும் 8 ஆம் சந்தேக நபர்களை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் ஏனைய எட்டுப் பேரில் 10 வயது சிறுவன், 12 வயது சிறுமி ஆகிய இருவரை விடுதலை செய்யுமாறும் ஏனைய ஏழு பேரையும் பிணையில் விடுவிக்குமாறும் அவர் உத்தரவு விட்டார்.

Previous Post

மின்தடைக்கு அதிகாரிகளே காரணம்

Next Post

பிரதமர் ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது – சி.பி.ரத்நாயக்க

Next Post

பிரதமர் ரணில் தலைமையிலான அரசு தமிழ் மக்களை ஏமாற்றுகிறது - சி.பி.ரத்நாயக்க

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures