Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Cinema

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

February 4, 2026
in Cinema, News, இந்தியா, முக்கிய செய்திகள்
0
சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ மை லார்ட்’ எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ மை லார்ட் ‘ எனும் திரைப்படத்தில் சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஜெயப்பிரகாஷ், குரு சோமசுந்தரம் , ஆஷா சரத் , இயக்குநர் கோபி நயினார், வசுமித்ரா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். விழிப்புணர்வுடன் கூடிய ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரிக்கிறார். இதனை அம்பேத்குமார் வழங்குகிறார்.

இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ஏழு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை விரைவு படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இந்த திரைப்படம்- எதிர்வரும் 13 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

Previous Post

ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்றும் பாகிஸ்தான் அணி வருகை

Next Post

பதவி நீக்கப்பட்டார் சிறீதரன்! நாடாளுமன்ற குழுத் தலைவராக சாணக்கியன்

Next Post
தாயக – கொழும்பு அரசியல் எதிர்வலைகளுக்குள் சிக்குண்டுள்ள சிறீதரன்

பதவி நீக்கப்பட்டார் சிறீதரன்! நாடாளுமன்ற குழுத் தலைவராக சாணக்கியன்

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures