Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோபம் வரும்போது அதிக வலிமை பெறுகிறேன்!!

September 18, 2019
in News, Politics, World
0

கேலிச்சித்திர கதாநாயகனான ‘தி இன்கிரெடிபல் ஹல்க்’ போல் கோபம் வரும்போது தாம் அதிக வலிமை பெறுவதாக பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறிக்கொண்ட போதிலும், எதிர்ப்பாளர்களின் கோபமே முன்னிலையில் இருக்கிறது.

உடன்பாட்டுடனோ அல்லது உடன்பாடின்றியோ அக்டோபர் 31ஆம் தேதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனை வெளியேற்றும் அவரது திட்டத்தைக் கண்டித்து லக்சம்பர்க் நகரில் திரண்ட நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதைத் தொடர்ந்து, லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டலுடன் போரிஸ் ஜான்சன் நடத்தவிருந்த கூட்டு செய்தியாளர் சந்திப்பிலிருந்து ஜான்சன் பங்கேற்கவில்லை.

காலி அரங்கில் பேசிய திரு சேவியர், கடந்த 2016ல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த இயக்கத்தின்போது  பிரிட்டிஷ் மக்களை ஏமாற்றி விட்டு, தற்போது அரசியல் லாபத்துக்காக பிரிட்டனின் எதிர்காலத்தை பணையம் வைத்திருப்பதாக கூறினார்.

பிரெக்சிட்டின் தோல்விக்கு ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களே காரணம் எனக் காட்டும் வகையில் போரிஸ்  ஜான்சன் பேசி வருவது அவர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டிஷ் குடிமக்கள், பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றியக் குடிமக்கள் அனைவரது எதிர்காலமும் தற்போது போரிஸ் ஜான்சன் கைகளில்தான் உள்ளது. அவர்களின் எதிர்காலம் ஜான்சனின் பொறுப்பு என்றார் திரு பெட்டல்.

“எங்களுக்கு எழுத்துபூர்வமான உடன்படிக்கை தேவை. காலம் கடந்துகொண்டிருக்கிறது. பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் இறங்குங்கள்,” என்றார் அவர்.

லக்சம்பர்க் பிரதமர் சேவியர் பெட்டலுக்கு சிரமம் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே லக்சம்பர்க் செய்தியாளர் கூட்டத்திலிருந்து விலக தாம் முடிவு செய்ததாக ஜான்சன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“சலசலப்பு அதிகமாக இருக்கும். நமது கருத்துகள் எடுபட்டிருக்காது,” என்றார் அவர்.

கூட்டத்தை உள்ளரங்கில் நடத்த தாங்கள் முடிவெடுத்ததாகவும் ஆனால் அனைத்து செய்தியாளர்களுக்கும் இடமளிக்கும் அளவுக்கு தங்களிடம் இடவசதி இல்லை என்று லக்சம்பர்க் தரப்பினர் கூறியதாகவும் பிரிட்டிஷ் அதிகாரிகள் கூறினர்.

ஆனால், தம்மை அவர்கள் முறையாக நடத்தவில்லை என்றும் ஜான்சன் குறைகூறினார்.

எனினும், இதுவரையில் உறுதியான திட்டம் எதையும் ஜான்சன் முன்வைக்கவில்லை என்று பல தரப்பிலிருந்தும் அவர் மீது குறைகூறப்படுகிறது.

Previous Post

முன்னுரிமை வர்த்தக நாடு அந்தஸ்தை மீண்டும் இந்தியாவுக்கு தர வேண்டும்

Next Post

அலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி!!

Next Post

அலம்பில் சந்தியில் விபத்து ஒருவர் பலி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

வவுனியா மாநகர சபை முதல்வர் பணி நீக்கம்…! வெடித்த ஆர்ப்பாட்டம் – வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு

June 30, 2026
ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

ஜூலையில் வெளியாகும் ஹாரர் திரில்லரான ‘அரூபி’

June 30, 2026
கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

கனடாவை முன்னோடி கால் இறுதிக்கு இட்டுச் சென்ற இயூஸ்டாக்கியோ போட்ட உபாதையீடு நேர கோல் 

June 29, 2026
யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

யாழ். மறைமாவட்ட புதிய ஆயராக அன்ரன் ரஞ்சித் ஆண்டகை நியமனம் 

June 29, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures