Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பை வந்தடைந்த இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா குழு

April 7, 2019
in News, Politics, World
0

இரண்டு நாள்கள் பயணமாக இன்று மாலை கொழும்பை வந்தடைந்த இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா தலைமையிலான 6 பேர் கொண்ட இராஜதந்திரிகள் குழுவிற்கு அரசாங்கம் விசேட அதிரடிப்படையினரின் அதியுயர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரு தரப்பு பாதுகாப்பு கலந்துரையாடலில் பங்கேற்கவே இந்திய பாதுகாப்புச் செயலர் தலைமகயிலான குழுவினர் இலங்கைக்கு வருகை தந்தனர்.

இரண்டு நாள்கள் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியக் குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதுகாப்புச் செயலர் ஹேமசிறி பெர்னான்டோ, பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன, மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்துவர். அத்துடன், பல்வேறு உயர்மட்டப் பிரமுகர்களையும் இந்திய பாதுகாப்புச் செயலர் சந்தித்துப் பேசவுள்ளார்.

இரண்டு நாடுகளும் எதிர்கொள்ளும் பாதுகாப்பு சவால்கள், குறித்தும், பாதுகாப்புச் செயலர்கள் மட்டத்தில் நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது கலந்துரையாடப்படவுள்ளது. இந்திய பாதுகாப்பு செயலர் சஞ்சய் மித்ரா கண்டி மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களுக்கும் செல்லவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Previous Post

பல பிரச்சினைகளுக்கு மத்தியில் மீண்டும் மைத்திரி – மஹிந்த கூட்டணி

Next Post

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டம்

Next Post

இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures