Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பை முடக்கியவர்களுக்கு மதுபானம் வழங்கினாரா சஜித்? வெளிப்படுத்தப்படும் தகவல்

March 18, 2022
in News, Sri Lanka News
0
பொருளாதார நெருக்கடிக்கு எதிராய் படையெடுத்த மக்கள் | அரசாங்கத்திற்கு எதிராக கோசங்கள்

நல்லாட்சி காலத்தில் மஹிந்த அணியினர் செயற்பட்டதை போன்றே தற்போது சஜித் தரப்பும் செயற்படுவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பை முடக்கும் வகையில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஐக்கிய மக்கள் சக்தி நேற்று முன் தினம் முன்னெடுத்திருந்தனர்.

இதில் இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்று தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் தமது ஆவேசத்தை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பில் தெரிவிக்கும் போதே ரில்வின் சில்வா குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு மதுபானம் வழங்கப்பட்டது என்ற தகவலொன்றை வெளிப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கொழும்பில் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்க மஹிந்த ராஜபக்ஷ அணியினர் இவ்வாறே ஒரு ஆர்ப்பாட்டத்தை செய்தனர்.

அதன்போதும் குடித்துவிட்டு நடனமாடுவதும், அரசியல் பிரச்சாரங்களை செய்வதும் மக்களை முட்டாள்கள் என நினைத்து அவர்களை ஏமாற்றும் வேலையினையே செய்தனர்.

 அவர்கள் கொடுத்த பொய்யான வாக்குறுதியை நம்பியே ராஜபக்ஷவினரை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர மக்கள் ஆதரவும் வழங்கினர். இப்போது சஜித் தரப்பினரும் அதே போன்றதொரு செயற்பாட்டையே செய்துள்ளனர்.

மதுபானங்களை வழங்கி, ஆதரவாளர்களை ஆடவிட்டு, சஜித் பிரேமதாசவின் அரசியல் பிரச்சாரத்தை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர உண்மையில் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவில்லை.ஆகவே எம்மை பொறுத்தவரையில் ராஜபக்ஷவினரும், சஜித் தரப்பினரும் ஒரே செயற்பாட்டில் தான் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை காலமாக இவர்கள் இரண்டு தரப்பினரும் வெவ்வேறு பெயர்களில் ஆட்சி செய்துள்ளனர்.

இந்த இரண்டு தரப்பும் தமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுத்த தவறான தீர்மானங்கள் காரணமாகவே இன்று நாடு பாதாளத்தில் விழுந்துள்ளது. அதனால் தான் மக்கள் ஒட்டுமொத்தமாக வீதிக்கு இறங்கி தமது அன்றாட வாழ்க்கைக்காக போராடும் நிலைமை உருவாகியுள்ளது.

எனவே இவர்கள் இனியும் மாறி மாறி ஆட்சி அமைப்பதினால் நாடு கட்டியெழுப்பப்பட போவதில்லை என்பதை மக்களே இனிமேல் விளங்கிக்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

#No 1 TamilWebSite 🇨🇦 | http://Facebook page / easy 24 news |  Easy24News –  யூடியூப் YouTube | [email protected]

Previous Post

ரூபவாஹினி கூட்டுத்தாபனம் திறைசேரியிடம் நிதி வழங்குமாறு கோரிக்கை

Next Post

பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் குறிப்பிடவில்லை | மத்திய வங்கியின் ஆளுநர்

Next Post
அரசியல் கைதிகளின் பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு குழப்பமடைகின்றது – கப்ரால்

பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் குறிப்பிடவில்லை | மத்திய வங்கியின் ஆளுநர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

வெளிநாட்டுப் பணத்தை கையில் வைத்திருப்போருக்கு இலங்கை மத்திய வங்கி ஆளுநர் விடுத்துள்ள அறிவிப்பு

May 20, 2022
ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

ஈஸி24நியூஸ் ஏற்பாட்டில் கிருபா பிள்ளை அழைப்பில் கனடா வரும் நடிகை கஸ்தூரி

March 8, 2023
கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

கனடாவில் கஸ்தூரி | பிரமாண்ட வரவேற்பு | Easy Entertaining Night -2023 | மக்கள் பேராதரவு

June 6, 2023
ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி

July 28, 2023
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார

மக்களின் எதிர்ப்பை தாக்குப்பிடிக்க முடியாத ‘கோட்டா ‘பதுங்கு குழியில் | அனுரகுமார

50,000 டொலர்களுக்கு மேலாக சரவணபவன் என்ற உணவகத்தின் சார்பாக அதன் தலைவர் மாண்புமிகு திரு கணேஷன் சுகுமார் அவர்கள் வைத்தியசாலை அதிகாரிகளிடம் அந்த நிதி உதவியினை வழங்கியிருப்பதனையும் இவ்வாறான நிதி அன்பளிப்பு செய்யும் நடவடிக்கை தொடர்ந்து சரவணபவன் என்ற உணவகத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருவது பாராட்டுதல்களுக்குரியதாகும்.

கனடாவில் மட்டுமன்றி உலகளாவியரீதியில் பல கிளை நிறுவனங்களை கொண்ட Skymoon Travels and Tours என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் பிரபல தொழில் அதிபருமான Andrew அவர்களின் அதீத ஆசையின் பிரகாரமே LUCID NIGHTSஇசைக்குழு என்ற ஆரம்பிக்கப்பட்டது.

கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு அதிகரிக்கும் சர்க்கரை நோய், ஞாபக மறதி, சுவாச பிரச்சினைகள் | அப்போலோ மருத்துவர்கள்

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

நடிகர் பாரி இளவழகன் நடிக்கும் ‘அன்பே டயானா’ படத்தினை விளம்பரப்படுத்தும் பாடல் வெளியீடு

July 4, 2026
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நீதித்துறையை சுயாதீனத்தை சீரழிக்கிறது | சஜித் பிரேமதாச

July 4, 2026
எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

எழுத்தாளர் தீபச்செல்வனின் நூல்களை விடுவிக்குமாறு PEN International வலியுறுத்தல்!

July 4, 2026
டார்க் – திரைப்பட விமர்சனம்

டார்க் – திரைப்பட விமர்சனம்

July 4, 2026

Recent News

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures