பத்தாவது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணியும், காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியும் மோதின.
இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.
இதன்படி நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங்களை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கி கொல்கத்தா அணிக்கு துவக்க வீரர் சுனில் நரைன் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்டரி விளாசி அதிரடி காட்டி 34 ஓட்டங்கள் எடுத்தார். மற்றொரு துவக்க வீரரான கம்பீர் 14 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றினார்.
அடுத்து வந்த உத்தப்பா(11), மணீஸ் பாண்டே(15), யூசப் பதான்(8), சூர்யகுமார் யாதவ்(15), கிராண்டோமி(0), கிறிஸ் வோக்ஸ்(18), குல்டர் நைல்(2), உமேஷ் யாதவ்(2) குல்தீப் யாதவ்(4) என வந்த வீரர்கள் அனைவரும் அடுத்தடுத்து அவுட்டாகி பெளலியன் திரும்பினர்.
கொல்கத்தா அணியின் தலைவர் காம்பிர் அவுட்டாகும் போது 3.2 ஓவரில் 48 ஓட்டங்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்த கொல்கத்தா அணி, அடுத்தடுத்து வந்த வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால், கொல்கத்தா அணி 19.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 131 ஓட்டங்கள் மட்டும் எடுத்து
பெங்களூரு அணி சார்பின் சஹால் 4 ஓவர் வீசி 16 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி கொல்கத்தா அணியை நிலைகுலையச் செய்தார்.
இதைத் தொடர்ந்து எளிய இலக்கை எட்டுவதற்கு களமிறங்கிய பெங்களூரு அணிக்கு துவக்க வீரர் கோஹ்லி முதல் பந்திலே டக் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த வீர்ர்கள் அனைவரும் கோஹ்லியை பின் தொடர்ந்த படியே சென்றனர்.
கெய்ல்(7), மந்தீப் சிங்(1), அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்ஸ்(8), கீதர் ஜாதவ்(9) என 40 ஓட்டங்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது.
இதனால் கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் உற்சாகமுடன் பந்து வீசினர். அதற்கு ஏற்றபடியே பெங்களூரு அணியின் பேட்டிங்கும் இருந்தது.
தாக்குபிடிப்பார்கள் என்று எதிர்பார்த்த போதும் பின்னி(8), நெகி(2) பத்ரி டக் அவுட் மற்றும் மில்ஸ் 2 ஓட்டங்கள் என பெங்களூரு அணி 8.3 ஓவரில் 44 ஓட்டங்களுக்குள் 9 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.
அடுத்து வந்த சலாலும் டக் அவுட்டாகி வெளியேற பெங்களூரு அணி 9.4 ஓவரில் 10 விக்கெட்டுகளை இழந்து 49 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. மிகவும் மோசமான தோல்விக்கு சொந்தக்கார அணியாக மாறியது.
இதன் மூலம் கொல்கத்தா அணி 82 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் குல்டைர் நைல் மற்றும் கிறிஸ் வோக்ஸ் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.