வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ், மஞ்சு வாரியர் மற்றும் பலர் நடித்த ‘அசுரன்’ படம் 100 நாட்களைக் கடந்து ஓடியது. அதற்காக வெற்றி விழா ஒன்றை நடத்தினார்கள்.
‘அசுரன்’ படத்தில் வில்லனாக நடித்த பவன், அந்த விழாவில் பேசுகையில், ‘குருவி’ படம் தான் நான் கடைசியாக கலந்து கொண்ட வெற்றி விழா. 150 நாட்கள் ஓடியதாகச் சொன்னார்கள். அது உண்மையா என்றெல்லாம் தெரியாது,” என்று பேசினார்.
அந்தப் பேச்சு விஜய் ரசிகர்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியது. இதனிடையே, அப்படிப் பேசியதற்காக ‘குருவி’ படத் தயாரிப்பாளர், இயக்குனர், விஜய் ஆகியோரிடம் மன்னிப்பு கேட்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் பவன் தெரிவித்துள்ளார்.
விழாவில் கலந்து கொண்டு மேடை ஏறி பேசும் போது இப்படித்தான் ஏதாவது பேசி விடுவேன் என்று பவன் அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.











